மகேந்திர சிங் தோனி
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சிக்ஸர் அடிப்பதில் வல்லவர் என நாம் அனைவருக்குமே தெரியும். இந்திய அணிக்கு தேவை படும் போது சில சிக்ஸர்களை அடித்து, இந்திய அணிக்கு வெற்றி வாங்கி தருவார். இது வரை 482 போட்டிகளில் விளையாடி இருக்கும் மகேந்திர சிங் தோனி, 15983 ரன் அடித்திருக்கிறார். அதில் அவர் அடித்த 331 சிக்ஸர்களும் அடங்கும்.