பிரண்டன் மெக்கல்லம்
நியூஸிலாந்து அணியின் அதிரடி தொடக்க வீரர் பிரண்டன் மெக்கல்லம் பேட்டிங் செய்ய வந்தாலே, அனைத்து ரசிகர்களும் தொலைக்காட்சிக்கு முன்பு தான் இருப்பார்கள். வந்த உடனே சரவெடி வெடிப்பதில் அவர் வல்லவர். தேவையான சமயத்தில் சிக்ஸர் அடித்து ரசிகர்களை குஷி படுத்துவார். தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 398 சிக்ஸர் அடித்துள்ளார் பிரண்டன் மெக்கல்லம்.