சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி முடிவடைந்ததைத் தொடர்ந்து ஐசிசி சார்பில் கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் கேப்டனாக பாகிஸ்தான் கேப்டன் சர்ஃப்ராஸ் அஹமது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவிலிருந்து விராட் கோலி, ஷிகர் தவன், புவனேஸ்வர் குமார் ஆகியோரும், பாகிஸ்தானில் இருந்து 4 பேரும், இங்கிலாந்தில் இருந்து 3 பேரும், வங்கதேசத்தின் சார்பில் தமிம் இக்பாலும் இடம்பெற்றுள்ளனர். நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் 12-ஆவது வீரராக இடம்பெற்றுள்ளார். ஷிகர் தவனும், ஃபகார் ஸமானும் தொடக்க வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஐசிசி கனவு அணியின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த சர்ஃப்ராஸ் அஹமது, ‘இந்த தலைமுறையின் ஆகச்சிறந்த வீரர்கள் அடங்கிய அணியின் கேப்டனாக நான் நியமிக்கப்பட்டிருப்பது எனக்கு கிடைத்த கெளரவம் ஆகும். இதுதவிர பாகிஸ்தானைச் சேர்ந்த ஃபகார் ஸமான், ஹசன் அலி உள்ளிட்ட வீரர்கள் இந்த அணியில் இடம்பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது’ என்றார்.
ஐசிசி சாம்பியன் ட்ரோபி கனவு அணி 2017 :
ஷிகர் தவன் (இந்தியா) (338 ரன்கள்)

ஃபகார் ஸமான் (பாகிஸ்தான்) (252 ரன்கள்)

தமிம் இக்பால் (வங்கதேசம்) (293 ரன்கள்)

விராட் கோலி (இந்தியா) (258 ரன்கள்)

ஜோ ரூட் (இங்கிலாந்து) (258 ரன்கள்)

பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) (184 ரன்கள் 3 விக்கெட்)

சர்ஃப்ராஸ் அஹமது (பாகிஸ்தான்) கேப்டன் விக்கெட் கீப்பர் (76 )

ஆதில் ரஷித் (இங்கிலாந்து) (7 விக்கெட்)

ஜுனைத் கான் (பாகிஸ்தான்) (8 விக்கெட்)

புவனேஸ்வர் குமார் (இந்தியா) (7 விக்கெட்)

ஹசன் அலி (பாகிஸ்தான்) (13 விக்கெட்)

கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து, 12-ஆவது வீரர்) (244 ரன்கள்).
