தற்போது இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என அழைக்க படும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்து கொண்டு வருகிறது. இதன் 4வது போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
அந்த போட்டிக்கு ஹிந்தி வர்ணனையில் விரேந்தர் சேவாக், சவுரவ் கங்குலி மற்றும் ஷனே வார்னே ஆகியோர் வர்ணனை செய்தனர். அந்த போட்டியின் போது அடிக்கடி மழை குறிக்கிட்டதால், ஆத்திரம் அடைந்த கங்குலி மற்றும் வார்னே இருவரும் தூங்கி விட்டனர்.
இதனை கண்ட விரேந்தர் சேவாக், அதை போட்டோ பிடித்து, ட்விட்டரில் பதிவேற்றினார்.
The future is shaped by one's dreams. These legends still don't waste time in following their dreams. Sone ka Maza@SGanguly99 @ShaneWarne pic.twitter.com/2zgZEC4KWa
— Virender Sehwag (@virendersehwag) June 5, 2017
இந்த போட்டி நினைத்த படி இல்லை என்று தான் சொல்லவேண்டும். அடிக்கடி மழை வேறு குறுக்கிட்டது. ஆனாலும், அந்த போட்டியில் இந்திய அணியின் கையே ஓங்கி இருந்தது.
யுவராஜின் அதிவேக அரைசதம், பாண்டியாவின் கடைசி நேர சூறாவளியால் முதல் இன்னிங்சின் முடிவில், 319 ரன் எடுத்தது இந்திய அணி. மற்ற வேலைகளை, இந்திய பந்து வீச்சாளர்கள் பார்த்து கொண்டனர்.
மழை குறுக்கிட்டு கொண்டே இருந்ததால், 41 ஓவரில் 289 ரன் எடுத்தால் வெற்றி என்று அறிவித்தனர். உமேஷ் யாதவ் 3 விக்கெட் எடுக்க, ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பீல்டிங் செய்ய, 31வது ஓவரில் 164 ரன்னுக்கு பாகிஸ்தான் அணி சுருண்டியது.
ஜூன் 8ஆம் தேதி ஓவல் மைதானத்தில் இலங்கை அணியுடன் இந்திய அணி மோதுகிறது.