இந்தியா மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான பயிற்சி போட்டியில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து 189 ரன் மட்டுமே எடுத்தது. இதனால், இந்த போட்டியில் வெற்றி பெற முதலில் இருந்தே பந்துவீச்சில் சிறப்பாக செயல் பட வேண்டும். அதைப்போலவே, தொடக்கத்திலேயே ரஹானே 7 ரன்னில் இருக்கும்போது, அவரை பெவிலியனுக்கு அனுப்பினார்கள்.தவான் மற்றும் கோலி ஜோடி 68 ரன் அடித்து வெற்றிக்கு போராடியது. ஆனால், தவான் மற்றும் தினேஷ் கார்த்திக் அடுத்தடுத்து வெளியேற இந்தியாவிற்கு நெருக்கடி கொடுத்தது நியூஸிலாந்து.
ஆனால் அடுத்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் மகேந்திர சிங்க் தோனி ஆகியோர் களத்தில் இருந்தனர். இருவரும் வெற்றிக்காக போராட தொடங்கினர். ஒரு பக்கம் விராட் கோலி பார்மில் உள்ளததால், தோனியின் மேல் குறி வைத்தனர் நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள்.
சிறிது நேரம் பொறுமையாக இருந்த தோனி, பொறுமையை கட்டுப்படுத்த முடியாத தோனி, சிக்சர் விலாச முடிவு செய்தார். இதனால், ட்ரெண்ட் போல்ட் வீசிய மெதுவான பந்தை, பிளாட் சிக்ஸ் அடித்தார். அந்த பந்தை பவுண்டரி கோட்டின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த கோலின் டி க்ராந்தோம்மே பிடிக்க செய்தார். ஆனால், பந்து அவரையும் தாண்டி சிக்ஸர் ஆனது. இந்த காட்சியை பார்த்த தோனி மற்றும் கோலி, இருவரும் சிரித்தனர். இதனை நம்ப முடியாத நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன், அவரும் சிரித்தார்.
அந்த வீடியோவை இங்கே பாருங்கள்:
https://twitter.com/lKR1088/status/868848446857519105