வீடியோ: "மனுஷன் என்னாமா ஆடுறாரு.. ரசிகர்கள் ஷாக்" பார்ட்டியில் தோனி ஆடிய குத்தாட்டம்! 1

பிறந்தநாள் பார்ட்டியில் இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்டியா, இசான் கிசன் ஆகியோருடன் தோனியும் சேர்ந்து ஆட்டம்போட்டு கொண்டாடிய தருணங்களின் வீடியோ தற்போது இணையதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

இந்திய அணியில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, ரிஷப் பிரண்ட் ஆகியோருடன் தோனி தனிப்பட்ட முறையிலும் மிகவும் நெருக்கமாக இருந்து வருகிறார்.

வீடியோ: "மனுஷன் என்னாமா ஆடுறாரு.. ரசிகர்கள் ஷாக்" பார்ட்டியில் தோனி ஆடிய குத்தாட்டம்! 2

பொதுவாக தோனி எந்த ஒரு நிகழ்ச்சிக்கு சென்றாலும் சாந்தமாக கலந்து கொண்டு வெளியே வந்து விடுவார். அப்படியான தோனியை மட்டுமே நாம் இத்தனை வருடங்கள் கண்டு வந்தோம். பெரிதளவில் எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் ஆரவாரமும் செய்யும் ஆள் இல்லை.

கிரிக்கெட் மைத்தனங்களிலும் அமைதியான ஆளாகவே இருந்திருக்கிறார். பலமுறை கோப்பைகளை பெற்றிருந்தாலும், அதை இளம் வீரர்களின் கையில் கொடுத்துவிட்டு ஓரமாக நின்றுவிடக்கூடிய தோனியை மட்டுமே நாம் அறிந்திருப்போம்.

தோனி

அண்மையில், துபாயில் நடந்த பர்த்டே பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட தோனி, இந்திய வீரர்கள் ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன், க்ருனால் பாண்டியா மற்றும் சிலருடன் சேர்ந்து குத்தாட்டம் ஆடி இருக்கிறார்.

மகேந்திர சிங் தோனி ஆடிய வீடியோ தற்போது சோசியல் மீடியாக்களில் பரவி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இதற்கு ரசிகர்கள், அமைதியாக இருந்த தோனியா இது? என்னமா ஆடுகிறார் மனுஷன்? என பல்வேறு கமெண்ட்களை அடித்து வருகின்றனர். தோனியின் இந்த மறுபக்கத்தை பார்க்கும் பொழுது நமக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

வீடியோ:

வங்கதேசம் கிரிக்கெட் தொடர்!

நியூசிலாந்து ஒருநாள் தொடர் முடிவுற்றவுடன், இந்திய வீரர்கள் வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். இத்தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே எல் ராகுல் ஆகியோர் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புகின்றனர். இவர்கள் டிசம்பர் 1ஆம் தேதி வங்கதேசம் சென்று சக இந்திய வீரர்களுடன் இணைய உள்ளனர்.

டிசம்பர் நான்காம் தேதி முதல் ஒருநாள் போட்டி துவங்குகிறது. மூன்று ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் இங்கே நடக்க உள்ளது. இந்திய அணி இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் கட்டாயம் வென்றாக வேண்டும். அப்போதுதான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிபட்டியலில் முன்னேறி முதல் இரண்டு இடங்களுக்குள் நுழைய வாய்ப்புள்ளது.

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *