டோனிக்கு மாற்று விக்கெட் கீப்பர் யாரும் இல்லை என்றும் இப்போதும் உலகின் நம்பர் ஒன் விக்கெட் கீப்பராக உள்ளார் என தேர்வுகுழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் பாராட்டி உள்ளார்.
இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், 6 போட்டிகள் கொண்ட ஒருநாள், 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. ஜனவரி 5-ந்தேதியில் இருந்து பிப்ரவரி மாதம் 24-ந்தேதி வரை சுமார் இரண்டு மாத காலம் தென்ஆப்பிரிக்காவில் மூன்று வகை தொடர் நடைபெறுகிறது.

இதற்காக இந்திய அணி வரும் 27-ந்தேதி தென்ஆப்பிரிக்காவிற்கு புறப்படுகிறது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Photo by Deepak Malik / BCCI / Sportzpics
வழக்கம்போல் அஸ்வின், ஜடேஜாவிற்கு இடம் கிடைக்கவில்லை. வேகப்பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார், மொகமது ஷமி, பும்ரா, ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். உமேஷ் யாதவிற்கு இடம் கிடைக்கவில்லை. சுழற்பந்து விச்சில் அக்சார் பட்டேல், குல்தீப் யாதவ், சாஹல் இடம்பிடித்துள்ளனர். அஸ்வின், ஜடேஜாவிற்கு மீண்டும் இடம் கிடைக்கவில்லை.
இந்திய அணியை தேர்வு செய்த பிறகு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரி பிரசாத், இந்திய அணியின் விக்கெட்-கீப்பர் மகேந்திர சிங் டோனியை பாராட்டி பேசினார்.
“அவருடன் ஒப்பீடும் அளவுக்கு எந்த விக்கெட் கீப்பரை பார்க்கவில்லை. இந்திய ‘ஏ’ அணி விளையாடிய தொடரின் போது இளம் விக்கெட் கீப்பர்களை பயன்படுத்தி பார்த்தோம்.
நாங்கள் எதிர்பார்த்தப் படி இளம் விக்கெட் கீப்பர்கள் செயல்பாடுகள் இல்லை. டோனிக்கு மாற்று விக்கெட் கீப்பர் யாரும் இல்லை. இதனால் 2019-ம் உலககோப்பை போட்டி வரை டோனியையே விக்கெட் கீப்பராக தொடர செய்வது என்று முடிவு செய்து விட்டோம்.
இளம் விக்கெட் கீப்பர்கள் ரிஷாப் பாண்ட், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு தொடர்ந்து இந்திய ‘ஏ’ அணியில் வாய்ப்பு அளிக்கப்படும்.”
இவ்வாறு அவர் கூறினார்.