இந்தியா இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வரலாற்று சிறப்புமிக்க சாதனை படைத்துள்ள பெற்றுள்ளது இதற்கு விக்கெட் கீப்பர் மிகப் பெரும் உறுதுணையாக இருந்தவர் ஆவார் தற்போதைக்கு டெஸ்ட் போட்டியில் விக்கெட் கீப்பிங் செய்ய இவர் தான் இந்தியாவில் மிகச் சிறந்தவர். அவர் முன்னாள் பயிற்சியாளர் அணில் கும்ப்ளேவிற்கும் தற்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கும் இந்தியாவின் டெஸ்ட் அணியின் அணுகுமுறை வித்தியாசத்தை தெரிவித்துள்ளார்
அனில் கும்ப்ளே எப்போதும் அணியை 600 ரன்களுக்கு மேலாக அடிக்கச் சொல்வார் மேலும் எதிரணியை 200க்கும் குறைவான ரன்களில் சுருட்டவும் எங்களை பணிப்பார். அது சில சமயங்களில் நடக்கலாம் ஆனால் பெரும்பாலும் அவர் கூறுவது நடக்க சாத்தியம் குறைவு.
சகா பெரும்பாலும் இந்திய அணியின் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விக்கெட் கீப்பிங் செய்கிறார் மேலும் அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் மாற்று வீரர் இந்தியாவில் தற்போது இல்லை எனலாம்
ஆனால் ரவி சாஸ்திரியின் இந்திய அணியின் மீதான அணுகுமுறை சற்று வித்தியாசமானது இவர் ஆடுகளத்திற்கு செல்லுங்கள் எதிர் அணியை துவம்சம் செய்யுங்கள் என்று கூறி எங்களை மைதானத்திற்குள் அனுப்புவார் இது அவருக்கு இது தான் செய்யவேண்டும் என்றில்லை ஆனால் எதிரணியை நிலைகுலைய வைக்க வேண்டும் மற்றும் ஆக்ரோஷமாக செயல்பட்டு வெற்றியை பறிக்க வேண்டும் இதுவே ரவி சாஸ்திரியின் பயிற்சி முறையாகும்
சகா இந்தியா இலங்கை இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தான் தனது 100 ஆவது முதல்தர போட்டியை விளையாடினார்
அது பற்றி அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது
எனக்கு இது நூறாவது முதல்தர போட்டியா என்பது கூட தெரியவில்லை பத்திரிகையாளர் சந்திப்பில் நீங்கள் கூறும் போது தான் எனக்கு நூறாவது முதல்தர போட்டியை அடைந்துள்ளேன் என தெரிகிறது நான் எனக்கு இது எனக்கு எந்த போட்டி என்று பார்த்ததில்லை எப்போதும் விக்கெட் கீப்பிங்கில் எப்போது வாய்ப்பு கிடைக்கும் என்றுதான் நின்றுள்ளேன். எப்போது ஸ்டெம்புகளை தூக்கலாக எடுக்கல, எப்போது கேட்ச்களை அல்லலாம் என்றபடியே ஸ்டெம்புகள் பின் நிற்பேன்.
முன்னதாக ரவிசாஸ்திரி சகா விக்கெட் கீப்பிங் செய்யும் போது எனக்கு முன்னால் இங்கிலாந்தில் விக்கெட் கீப்பர் பாப் டெய்லரை நினைவுபடுத்துகிறார் என்று கூறியிருந்தார் அதைப் பற்றி அவரிடம் கேட்டபோது நான் இதுவரை பாப் டெய்லர் விக்கெட் கீப்பிங் செய்து பார்த்ததில்லை ஆனால் முழு மூச்சாக என்னுடைய முழு திறமையையும் வெளிப்படுத்தி விக்கெட் கீப்பிங் செய்வதாக கூறினார் சகா. ஆனால் விக்கெட் கீப்பிங் செய்வதில் நான் எப்போதும் தோனிக்கு பின்னர்தான்.
100 முதல் தரப் போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்த எனக்கு 200 முதல்தர போட்டிகளில் விளையாட வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார்.

33 வயதான சகா மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளுக்கு விராத் கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
நாளை முதல் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
இலங்கை அணி கடந்த ஒரு நாள் தொடரில் ஜிம்பாபே அணியுடன் விளையாடியது இதில் இலங்கை அணி ஜிம்பாபே அணியுடன் ஒரு நாள் தொடரில் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிட்ட தக்கது.