இனிமே ரோகித் சர்மா டி20 டீமுக்கு வந்து அசிங்கப்பட வேணாம்ப்பா... டி20க்கு ஹர்திக் பாண்டியா தான் இனிமே எல்லாமே - முன்னாள் வீரர் பேச்சு! 1

டி20 அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி இரண்டு பேர் இருந்திருந்தாலும் ஹர்திக் பாண்டியா தான் கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பார் என கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா.

டி20 உலக கோப்பை தொடர் முடிவுற்ற பிறகு ரோகித் சர்மா மீதான நம்பிக்கை பிசிசிஐ-க்கு குறைந்திருப்பது, அவர்கள் எடுக்கும் முடிவில் இருந்தே தெரிகிறது. நியூசிலாந்து அணியுடன் நடந்த டி20 தொடரில் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் அப்போது ரோகித் சர்மா ஓய்வில் இருந்ததார், ஹர்திக் பாண்டியா நிரந்தரம் இல்லை என கருத்துக்கள் வந்தது.

இனிமே ரோகித் சர்மா டி20 டீமுக்கு வந்து அசிங்கப்பட வேணாம்ப்பா... டி20க்கு ஹர்திக் பாண்டியா தான் இனிமே எல்லாமே - முன்னாள் வீரர் பேச்சு! 2

தற்போது இலங்கை அணியுடனான டி20 தொடருக்கு ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இருந்தனர். ஆனால் அவர்களை எடுக்கவில்லை. இதற்கான காரணமும் தெரியவில்லை. தற்காலிகமா? நிரந்தரமா? என்பது பற்றியும் எந்தவித தகவல்களும் வரவில்லை.

அப்படி இருக்கையில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இது 2024 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்ற கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இனிமே ரோகித் சர்மா டி20 டீமுக்கு வந்து அசிங்கப்பட வேணாம்ப்பா... டி20க்கு ஹர்திக் பாண்டியா தான் இனிமே எல்லாமே - முன்னாள் வீரர் பேச்சு! 3

இந்நிலையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் டி20 அணிக்குள் எடுக்கப்பட்டாலும், அப்போதும் ஹர்திக் பாண்டியா தான் கேப்டனாக இருப்பார் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா. அவர் கூறுகையில்,

ஹர்திக் பாண்டியா டி20 கேப்டன் ஆக நியமிக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய முடிவு. ரோகித் சர்மா, விராட் கோலி இருவரும் அணியில் இருந்திருந்தாலும் ஹர்திக் பாண்டியா தான் கேப்டனாக இருந்திருப்பார் என நான் நம்புகிறேன். ரோகித் சர்மா எதற்காக எடுக்கப்படவில்லை? இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம் இனி சீனியர் வீரர்களுக்கு அணியில் இடம் இல்லை என்று. ஒருவேளை அவர்கள் தன்னை நிரூபித்து மீண்டும் அணிக்குள் வந்தாலும் ஹர்திக் பாண்டியா கேப்டன் ஆகத்தான் இருப்பார். அதில் எந்தவித மாற்றமும் இருக்காது.

இனிமே ரோகித் சர்மா டி20 டீமுக்கு வந்து அசிங்கப்பட வேணாம்ப்பா... டி20க்கு ஹர்திக் பாண்டியா தான் இனிமே எல்லாமே - முன்னாள் வீரர் பேச்சு! 4

அதேநேரம் பிசிசிஐ இப்படி ஒளிவு மறைவு விளையாட்டை விளையாடக்கூடாது. ஒரு அறிக்கை மூலம் ஹர்திக் பாண்டியா நிரந்தரமா? இல்லையா? என்பதை தெரிவிக்க வேண்டும்.” என்று ஆகாஷ் சோப்ரா பேசியுள்ளார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *