"ரோகித் சர்மா போட்ட மாஸ்டர் பிளான்" சவுத் ஆப்பிரிக்காவ காலி பண்ண, என்ன வச்சு பிளான் பண்றாங்க - அக்ஸர் பட்டேல் சொல்லும் சீக்ரெட்! 1

சவுத் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் திட்டம் இதுதான் என்று சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார் அக்சர் பட்டேல்.

டி20 உலக கோப்பையில் நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்றில் இந்திய அணி தனது மூன்றாவது போட்டியை தென்னாபிரிக்க அணிக்கு எதிராக வரும் ஞாயிற்றுக்கிழமை விளையாடுகிறது. முதல் இரண்டு போட்டிகளில் பாகிஸ்தான் அணியை நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், நெதர்லாந்து அணியை 56 ரன்கள் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.

"ரோகித் சர்மா போட்ட மாஸ்டர் பிளான்" சவுத் ஆப்பிரிக்காவ காலி பண்ண, என்ன வச்சு பிளான் பண்றாங்க - அக்ஸர் பட்டேல் சொல்லும் சீக்ரெட்! 2

2 வெற்றிகள் பெற்று 4 புள்ளிகளுடன் தனது குரூப்பின் புள்ளிபட்டியலில் இந்திய அணி முதல் இடத்தில் இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா அணியை மட்டும் வீழ்த்தி விட்டால் இந்திய அணியின் அரை இறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிடும் என்று கூறலாம்.

ஆகையால் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்துவதற்கு இந்திய அணி பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. குறிப்பாக நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னரே தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்துவதற்கான திட்டங்கள் துவங்கிவிட்டதாக தெரிகிறது.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா

இதைப்பற்றி சமீபத்திய பேட்டியில் அக்சர் பட்டேல் தெரிவித்திருந்தார். மேலும் நல்ல பார்மில் இருக்கும் ரபாடா மற்றும் நார்கியா இருவரையும் எப்படி எதிர்கொள்வது என்பதற்கும் திட்டங்கள் இருப்பதாக அவர் கூறியிருக்கிறார்  அக்சர் பட்டேல் தனது பேட்டியில்,

“இந்திய அணியில் முதல் ஆறு இடங்களில் இடதுகை பேட்ஸ்மேன்கள் இல்லை. இது தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாகவும் அமையலாம். அந்த நேரத்தில் என்னை நான்காவது அல்லது ஐந்தாவது இடத்தில் களமிறக்கி மிடில் ஓவர்களை எதிர்கொள்ள வைப்பதற்கு திட்டங்கள் சென்று கொண்டிருக்கின்றன. இதற்காக பேட்டிங்கிலும் கூடுதல் கவனம் செலுத்தி பயிற்சி செய்து வருகிறேன்.

அக்ஸர் பட்டேல்

பாகிஸ்தான் அணிக்கு எதிராக இது போன்ற ஒரு திட்டம்தான் இருந்தது. துரதிஷ்டவசமாக நான் அடுத்த ஓவரிலேயே ஆட்டம் இழந்துவிட்டேன். இந்த உலகக் கோப்பை தொடர் துவங்குவதற்கு முன்னரே என்னிடம் கூறிவிட்டனர் எனது பேட்டிங் வரிசை முன்னும் பின்னுமாக இருக்கும் என்று.

சில நேரங்களில் மூன்றாவது அல்லது நான்காவது இடங்களில் கூட இறங்க வேண்டிய சூழல் ஏற்படும். அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்கள். பயிற்சியின்போது அதற்கும் கூடுதலாக பயிற்சி செய்தேன்.

பந்துவீச்சிலும் கவனம் செலுத்தி வருகிறேன். பாகிஸ்தானுக்கு எதிராக எனது பந்துவீச்சில் மூன்று சிக்ஸர்கள் அளிக்கப்பட்டது. அதில் இரண்டு பந்துகள் மிகச் சிறப்பான பந்து என்று ரோகித் சர்மா என்னிடம் வந்து கூறினார். ஒரு பந்து மட்டும் தவறான இடத்தில் போட்டு விட்டேன். அதையும் சரி செய்வதற்கு கவனம் செலுத்தி வருகிறேன்.” என்றார்.

ரவீந்திர ஜடேஜாவின் இடத்திற்கு அக்சர் பட்டேல் வந்திருப்பதால் அவர் மீது கூடுதல் கவனம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *