சீக்கிரம் தூக்குறது நல்லது... இவர வச்சுக்கிட்டு இன்னுமா கப் ஜெயிக்க முடியும்னு நினைக்கிறீங்க - முன்னாள் வீரர் ஓபன் டாக்! 1

ரோகித் சர்மா டி20 கேப்டன் பொறுப்பில் இருப்பது இனி சரியாக இருக்காது என்று கருத்து தெரிவித்திருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் வீரர் அத்துல் வாசன்.

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதி சுற்றோடு வெளியேறியதிலிருந்து பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக கேப்டன் மற்றும் துணை கேப்டன் பொறுப்பில் இருந்த ரோகித் சர்மா மற்றும் கே எல் ராகுல் இருவரும் கூடுதல் விமர்சனங்களை சந்தித்து வருகின்றனர்.

இந்திய அணி

ஏனெனில் இருவரும் பேட்டிங்கில் 150 ரன்கள் கூட அடிக்கவில்லை. மற்ற அணிகளுக்கு சிறப்பான துவக்கம் கிடைத்தபோது இந்திய அணிக்கு அதுதான் பெரிய சிக்கல் ஆகவே இருந்தது.

ரோகித் சர்மா அணியில் வீரர்களை பயன்படுத்திய விதம் எடுபடவில்லை. அவரது திட்டம் பலிக்கவே இல்லை என்று பல முன்னாள் வீரர்கள் விமர்சனங்களை முன் வைத்திருக்கின்றனர்.

அந்த வகையில் ரோகித் சர்மாவின் டி20 கேப்டன் பொறுப்பு முடிவுக்கு வந்துவிட்டது. புதிய கேப்டனை தேர்வு செய்வதற்கு இதுதான் சரியான நேரம் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் முன்னாள் வீரர் அத்துல் வாசன். அவர் கூறுகையில்,

ரோஹித் சர்மா

“ரோகித் சர்மாவின் டி20 கேப்டன் பொறுப்பு முடிவுக்கு வந்திருக்கிறது என நினைக்கிறேன். ஒரு கேப்டனை முடிவு செய்யும் பொழுது குறைந்தபட்சம் இரண்டு உலக கோப்பைகள் அவர் இருக்க வேண்டும் என்று திட்டமிட வேண்டும்.

ரோகித் சர்மாவை இனியும் டி20 கேப்டன் பொறுப்பில் நீடித்து வைப்பதற்கு எந்தவித பிடிப்பும் இல்லை. அவரை வைத்து கோப்பையை வெல்ல முடியும் என்ற எண்ணமும் இல்லை.

தற்போது நமக்கு இரண்டு வாய்ப்புகள் இருக்கிறது. ஹார்திக் பாண்டியா அல்லது ரிஷப் பண்ட் இருவரில் ஒருவரை டி20 போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்க வேண்டும்.

ரோகித் சர்மா

தற்போது வரை உலகக் கோப்பை அரையிறுதியில் நாம் தோல்வியை தழுவி விட்டோம் என்பதை நம்ப முடியவில்லை. இந்தியா அடிலேய்டு மைதானத்தில் பேட்டிங் செய்தது போன்றும், இங்கிலாந்து அணி சார்ஜா மைதானத்தில் பேட்டிங் செய்தது போன்றும் இருந்தது.

இக்கட்டான சூழலில் பவுலர்களை எங்கே? எப்படி? பயன்படுத்த வேண்டும் என்பதை முன்பே திட்டமிடாமல் இந்தியா விளையாடியதாக தெளிவாகத் தெரிந்தது. ரோகித் சர்மாவின் கேப்டன் பொறுப்பை காரணம் கூறி இனியும் யாரும் தப்பிக்க முடியாது. விரைவில் மாற்றம் மட்டுமே தேவை. அணி நிர்வாகம் இதற்க்கு விரைவில் முடிவெடுக்க வேண்டும்.” என்றார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *