Cricket, India, Australia, Virat Kohli

2017ஆம் ஆண்டுக்கான விருதுகளை சர்வதேச கிரிக்கெட் வாரியம் (ஜசிசி) அறிவித்து வருகிறது. இதில் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தேர்வாகியுள்ளார். இதே போல ஒட்டுமொத்தமாக 2017ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதையும் விராட் கோலி பெற்றுள்ளார். கிரிக்கெட் ஜாம்பவான் சர் கார்பீல்டு சோபர்ஸ் பெயரில் வழங்கப்படும் இந்த விருது கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாகும்.

1. வருடத்தின் சிறந்த நடுவர் :

ஐசிசி-யின் வருடத்தின் சிறந்த நடுவர் விருதை மராய்ஸ் எராஸ்மாஸ் தட்டி சென்றார். 47 டெஸ்ட், 74 ஒருநாள், 26 டி20 போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றிய இவர், கடந்த ஆண்டும் இந்த விருதை தட்டி சென்றார் என்பது குறிப்பிட தக்கது.

2. ரசிகர்களுக்கு பிடித்த கணம்:

2017ஆம் ஆண்டில் பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றது தான் பிடித்த கணம் என்று ரசிகர்கள் தேர்வு செய்துள்ளார்கள்.

3. இணைந்திருக்கும் நாட்டின் சிறந்த வீரர்:

இணைந்திருக்கும் நாட்டின் சிறந்த வீரர் விருதை ஆப்கானிஸ்தான் அணியின் ரஷீத் கான் வென்றுள்ளார். 2017ஆம் ஆண்டு அவரது நாட்டுக்காக அவர் 60 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

4. வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரர்:

ஐசிசி-யின் வளர்ந்துவ யாரும் கிரிக்கெட் வீரர் விருதை பாகிஸ்தான் வீரர் ஹசன் அலி தட்டி சென்றார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 13 விக்கெட்டுகள் எடுத்து கோப்பையை வெல்ல உதவி செய்தார்.

5. டி20I யில் அற்புதமாக செயல் பட்ட வீரர்:

டி20I யில் அற்புதமாக செயல் பட்ட வீரருக்கான விருதை இந்திய அணியின் யுஸ்வேந்த்ர சஹால் தட்டி சென்றார். இங்கிலாந்து அணிக்கு எதிராக பெங்களூருவில் 25 ரன் கொடுத்து 6 விக்கெட் அள்ளினார் சஹால்.

6. ஒருநாள் போட்டியின் சிறந்த வீரர்:

கடந்த வருடம் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் அடித்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்த விருதை வென்று அசத்தினார்.

7. டெஸ்ட் போட்டியின் சிறந்த வீரர்:

கடந்த வருடம் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் அடித்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் இந்த விருதை வென்றார்.

8. வருடத்தின் சிறந்த கிரிக்கெட்டர்:

கடந்த வருடம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்து விதமான போட்டிகளிலும் சிறப்பாக செயல் பட்டதால், இந்த விருதை கோலி தட்டி சென்றார்.

9. வருடத்தின் சிறந்த ஒருநாள் அணி:

கடந்த வருடம் ஒவ்வொரு அணிகளிலும் ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதை வைத்து, ஒரு அணியை உருவாக்கியுள்ளது ஐசிசி.

10. வருடத்தின் சிறந்த டெஸ்ட் அணி:

கடந்த வருடம் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல் பட்ட வீரர்களை வைத்து, ஒரு டெஸ்ட் அணியை உருவாக்கியுள்ளது ஐசிசி.

11. கிரிக்கெட்டை மதித்த தருணம்:

கடந்த வருடம் நடந்த மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பையின் அரையிறுதி போட்டியில் தென்னாபிரிக்கா அணி தோற்ற பிறகு, இங்கிலாந்து வீராங்கனை தென்னாபிரிக்கா வீராங்கனைக்கு ஆறுதல் கூறினார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *