ஆஸ்திரேலியாவுக்காக கிறிஸ் லின் தொடக்க வீரராக களமிறங்கமாட்டார் - டேரன் லெக்மண் 1

தற்போது இந்தியாவில் நடக்கும் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக கலக்கும் கிறிஸ் லின், சாம்பியன்ஸ் ட்ராப்பியில் ஆஸ்திரேலியாவுக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வாய்ப்பு இல்லை என அந்த அணியின் பயிற்சியாளர் டேரன் லெக்மண் கூறியுள்ளார்.

அதிரடி ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின், இந்த ஐபில் தொடரில் மிரட்டி கொண்டு வருகிறார். அவரது 87வது டி20 போட்டியில் தான் 3வது முறையாக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கினார். இந்த ஐபில்-இன் முதல் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிராக 41 பந்துகளில் 93 ரன் அடித்து 183-ரன்னை 15வது ஓவரில் 10-விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அடுத்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 32 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு தோள்பட்டை காயம் காரணமாக அடுத்த 5 போட்டிகளில் விளையாடவில்லை.

இதனால் அவரது அணிக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. காயம் சரியானதும் பெங்களூரு அணிக்கு எதிராக 22 பந்து அரைசதம், பஞ்சாப் அணிக்கு எதிராக 84 ரன் என மிரட்டி வருகிறார். இதுவரை இந்த ஐபில்-இல் 291 ரன் (சராசரி – 58.20) எடுத்து கலக்குகிறார். இதுமட்டும் இல்லாமல், ஆஸ்திரேலியாவில் நடந்த கடந்த பிக் பாஷ் லீக் தொடரில் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் 309 ரன் அடித்தார்.

இப்படி உலகெல்லாம் கலக்கி கொண்டு வரும் கிறிஸ் லின் ஆஸ்திரேலியாவிற்காக தொடக்க வீரராக களமிறங்குவது சந்தேகம் தான். டேவிட் வார்னர் மற்றும் ஆரோன் பின்ச், இவர்கள் தான் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என லெக்மண் கூறினார். முதலில் அவர் அணியில் இடம் பிடிக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

“முதலில் லின் அணியில் இடம் பெறவேண்டும், அடுத்தது கேப்டன் சொல்லும் இடத்தில இறங்க வேண்டும். அவர் திறமையான வீரர், காயங்களை மீறி எங்களுக்காக விளையாடுவார் என நம்புகிறோம் ,” என லெக்மண் கூறினார்.

ஜூன் மாதம் சாம்பியன்ஸ் ட்ராப்பி தொடரில் தன்னுடைய முதல் போட்டியில் ஜூன் 2ஆம் தேதி நியூஸிலாந்து அணியுடன் விளையாடவுள்ளது ஆஸ்திரேலியா அணி. அதற்கு முன்பாக மே 26 மற்றும் மே 29ஆம் தேதி பயிற்சி போட்டிகளில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் மோதவுள்ளது.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *