Cricket, Ashes, Steve Smith, Australia, Mitchell Marsh

ஐ.சி.சி விருதுகள் : இந்த வருடத்தின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டர் ஸ்டிவ் ஸ்மித்

சென்ற காலண்டிற்கான ஐ.சி.சியின் விருதுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது. இந்த வருடத்தின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த சில வருடங்களாக டெஸ்ட் போட்டிகளில் அபாரமாக ஆடி வருகிறார் ஸ்மித். கிட்டத்தட்ட உலகின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன் டான் பிராட்மேனை நெருங்கிவிட்டார் ஸ்மித். இந்த வருட ஆஷஷ் தொடரில் அபாரமாக ஆடிய ஸ்மித், மொத்தம் 687 ரன்களை குவித்தார். இதில் இரண்டு இரட்டை சதங்களும் அடங்கும். மேலும், இதன் சராசரி 137.80 ஆகும்.

இந்த விருதினை இதற்கு முன்னர் 205ஆம் ஆண்டு பெற்றுள்ளார் ஸ்மித். கடந்த சில வருடங்களாகவே இந்த விருதினை ஆஸ்திரேலியா வீரர்களே பெற்று வருகின்றனர். 2013ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் க்ளார்க் பெற்றார் அதன் பின்னர் 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் பெற்றார். 2015ஆம் ஆண்டு ஸ்டீவ் ஸ்மித்தும் 2016ஆம் ஆண்டு அஸ்வினும் தற்போது மீண்டும் ஸ்மித்தும் இந்த விருதினை பெற்றுள்ளனர்.

2016செப்டம்பர் முதல் 2017 டிசம்பர் வரை எடுத்துக்கொள்ளப்பட்ட கால கட்டத்தில் 16 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார் ஸ்மித். இதில் 1875 ரன்கள் குவித்துள்ளார். இதன் சராசரி 78.12 ஆகும். இதில் 8 சதங்களும் 5 அரை சதங்களும் அடங்கும். இதன் காரணமாக இவருக்கு இந்த வருடத்தின் மிகசிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் என்ற ஐ.சி.சியின் விருது கிடைத்துள்ளது.

இந்தியாவுடனான தொடரிலும் 250 ரன்களுக்கு மேல் குவித்தார் ஸ்மித் மேலும், தற்போது ஆஷஷ் தொடரிலும் அசத்தியுள்ளார்.

தற்போது வரை 61 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளா ஸ்மித், 63.75 சராசரி வைத்துள்ளார். மேலும், அதிகப்படியாக ஐ.சி.சி தரவரிசையில் 947 புள்ளிகள் பெற்றுள்ளார் ஸ்மித். இது தான் பிராட்மேன் பெற்றதை விட 14 புள்ளிகள் மட்டுமே குறைவாகும்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *