ஆப்கானிஸ்தான் அணி டெஸ்ட் அந்தஸ்து அறிவித்த பிறகு வரும் ஜூன் 14ம் தேதி முதன் முதலாக இந்திய அணியுடன் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் போட்டியில் ஆட இருக்கிறது. இந்த போட்டியின் மூலமாக இந்திய வீரர்கள் எட்ட இருக்கும் மைல்கல் சிலவற்றை இங்கு காண்போம்.
இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி தோள்பட்டை காயம் காரணமாக இந்த போட்டியில் பங்கேற்கவில்லை. இதனால் ரஹானே இந்த போட்டியில் கேப்டன் பொறுப்பேற்று வழிநடத்துகிறார்.
Photo by: Shaun Roy / BCCI / SPORTZPICS
இதுவரை 44 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ரஹானே 2,883 ரன்கள் குவித்துள்ளார். இன்னும் 117 ரன்கள் எடுத்தால் டெஸ்ட் போட்டியில் 3000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார். இந்த மைல்கல்லை எட்டினால் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் 3000 ரன்கள் எட்டிய 22வது வீரர் ஆவார்.
முரளி விஜய் 55 போட்டிகளில் 3,802 ரன்கள் குவித்துள்ளார். இன்னும் 198 ரன்கள் எடுத்தால் டெஸ்ட் போட்டியில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டுவார்.
இதுவரை 49 டெஸ்ட் போட்டிகள் ஆடியுள்ள ஷிகர் தவான், இந்த டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவெனில் இடம் பெற்றால், டெஸ்ட் அரங்கில் தனது 50வது டெஸ்ட் போட்டியை நிறைவு செய்வார்.
சித்தேஸ்வர் புஜாரா 57 டெஸ்ட் போட்டிகளில் 533 பவுண்டரிகள் விளாசியுள்ளார். இந்த போட்டியில் 17 பவுண்டரிகள் விளாசினால் 550 பவுண்டரிகள் என்ற மைல்கல்லை எட்டுவார்.
Photo by Ron Gaunt/BCCI//SPORTZPICS
Use of this image is subject to the terms and conditions as outlined by the BCCI. These terms can be found by following this link:
http://www.sportzpics.co.za/image/I0000SoRagM2cIEc
அஸ்வின் இன்னும் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினால் டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மிச்சேல் ஜான்சனை முந்துவார். அஸ்வின் இதுவரை 57 டெஸ்ட் போட்டிகளில் 311 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். மேலும், இன்னும் 57 ரன்கள் எடுத்தால் அனைத்து போட்டிகளிலும் சேர்த்து 3000 ரன்கள் என்ற இலக்கை எட்டுவார்.
Photo by Ron Gaunt / BCCI / SPORTZPICS
உமேஷ் யாதவ் டெஸ்ட் போட்டிகளில் 99 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இன்னும் ஒரு விக்கெட் வீழ்த்தினால் டெஸ்ட் அரங்கில் 100 விக்கெட்டுகள் வீழ்த்துவார். இந்த மைல்கல்லை எட்டும் 22வது வீரர் ஆவார்.
டெஸ்ட் போட்டியில் மீண்டும் இடம் பெற்றிருக்கும் தினேஷ் கார்த்திக், 8 வருடங்களுக்கு பிறகு ஆடும் முதல் டெஸ்ட் போட்டியாகும். இவர் இஷுவரை 87 டெஸ்ட் போட்டியை தவறவிட்டிருக்கிறார். இதற்கு முன்பு பார்த்திவ் பட்டேல் 83 டெஸ்ட் போட்டிகளை தவற விட்டதே அதிகபட்சமாக இருந்தது.