Indian cricket tem

இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி இரண்டு போட்டிகளில் வென்று தொடரையும் வென்றது. முதல் ஒருநாள் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய இலங்கை அணி அடுத்த இரண்டு போட்டிகளில் தன்னுடைய பழைய பார்முக்கு வந்தது. இந்திய வீரர்களான ரோகித் சர்மா, ஷிகர் தவான், ஷ்ரேயஸ் ஐயர், ஜேஸ்ப்ரிட் பும்ரா, குல்தீப் யாதவ் ஆகியோர் இந்த தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய அணி தொடரை வெல்ல முக்கிய காரணமாக இருந்துள்ளார்கள். எனினும், இந்த தொடரில் செயல் பட்டதை வைத்து இந்திய வீரர்களின் மார்க்குகளை பார்ப்போம்:

ரோஹித் சர்மா – 7/10

இந்தியா vs இலங்கை 2017: ஒருநாள் தொடர் - இந்திய வீரர்களின் மார்க் 1
Rohit Sharma Captain of India celebrates his Two Hundred runs during the 2nd One Day International between India and Sri Lanka held at the The Punjab Cricket Association IS Bindra Stadium, Mohali on the 13 December 2017
Photo by Deepak Malik / BCCI / Sportzpics

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இந்த தொடரில் முதல் போட்டியில் சொற்ப ரன்னில் அவுட் ஆனாலும், இரண்டாவது போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இந்த தொடரில் குவித்த வீரர் ரோஹித் சர்மா தான்.

ஷிகர் தவான் – 8/10

Cricket, India, Australia, Rohit Sharma, Shikhar Dhawan, Ajinkya Rahane, KL Rahul

இந்திய அணியின் தொடக்கவீரர் தவான் முதல் போட்டியில் டக் அவுட் ஆனாலும் 2வது போட்டியில் அரைசதமும் 3வது போட்டியில் சதமும் அடித்து விளாசினார். இதனை தொடரில் இவர் 168 ரன் அடித்திருக்கிறார்.

ஷ்ரேயஸ் ஐயர் – 10/10

இந்தியா vs இலங்கை 2017: ஒருநாள் தொடர் - இந்திய வீரர்களின் மார்க் 2
Shreyas Iyer of India with ODI cap during the first One Day International ( ODI ) between India and Sri Lanka held at the Himachal Pradesh Cricket Association Stadium, Dharamsala on the 10th December 2017 Photo by Deepak Malik / BCCI / Sportzpics

மும்பையை சேர்ந்த இளம் வீரர் இந்திய அணிக்காக இந்த தொடரில் அறிமுகம் ஆனார். விராட் கோலி இல்லாத காரணத்தினால் இவர் கோலியின் இடத்தில் விளையாடினார். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டு அற்புதமாக விளையாடினார் ஐயர். 2வது போட்டியில் 88 ரன் அடித்த அவர் மூன்றாவது போட்டியில் 65 ரன்னில் அவுட் ஆனார்.

தினேஷ் கார்த்திக் – 2/10

இந்தியா vs இலங்கை 2017: ஒருநாள் தொடர் - இந்திய வீரர்களின் மார்க் 3
Indian cricketer Dinesh Karthik runs between the wickets during the second ODI cricket match between India and New Zealand at The Maharashtra Cricket Association Stadium in Pune on October 25, 2017. / AFP PHOTO / INDRANIL MUKHERJEE / —-IMAGE RESTRICTED TO EDITORIAL USE – STRICTLY NO COMMERCIAL USE—– / GETTYOUT

தமிழகத்தை சேர்ந்த நடுவரிசை வீரர் தினேஷ் கார்த்திக் இந்த தொடரில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளாமல் சொற்ப ரன்களில் அவுட் ஆனார். தென்னாபிரிக்கா தொடரில் இவரது உதவி இருந்தால், இந்திய அணி கண்டிப்பாக ஒரு நல்ல ஸ்கோரை அடிக்கும்.

மனிஷ் பாண்டே – 2/10

Cricket, India, Australia, Manish Pandey, Hardik Pandya

இளம் வீரர் மனிஷ் பாண்டேவுக்கு தினேஷ் கார்த்திகை போல் அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை இந்த தொடரில். ஆனால், முதல் போட்டியில் கிடைத்த வாய்ப்பை அவர் பயன்படுத்தி கொள்ளவில்லை.

எம்.எஸ். தோனி – 9/10

இந்தியா vs இலங்கை 2017: ஒருநாள் தொடர் - இந்திய வீரர்களின் மார்க் 4

இந்திய அணியின் நட்சத்திர வீரர் மகேந்திர சிங் தோனி முதல் போட்டியில் இந்திய வீரர்கள் அனைவரும் திணறிய போது தனியாளாக நின்று 65 ரன் அடித்தார். இரண்டாவது போட்டியில் வந்த வேகத்தில் ஒரு சிக்ஸர் அடித்து பெவிலியன் சென்ற அவர் விக்கெட்-கீப்பிங்கில் பல விக்கெட்டுகளுக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

ஹர்டிக் பாண்டியா – 6/10

இந்தியா vs இலங்கை 2017: ஒருநாள் தொடர் - இந்திய வீரர்களின் மார்க் 5
Indian cricketer Hardik Pandya reacts after delivering a ball during the first One Day International (ODI) cricket match between Sri Lanka and Indian at the Rangiri Dambulla International Cricket Stadium in Dambulla on August 20, 2017. / AFP PHOTO / LAKRUWAN WANNIARACHCHI (Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images)

நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா பேட்டிங்கில் சொல்லிக்கொள்ளும் படி அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. முதல் போட்டியில் அனைவரும் திணறிய போது இவர் பொறுமையாக விளையாடாமல் பெவிலியன் சென்றார். ஆனால், பந்துவீச்சில் எதிரணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தி சில முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார்.

குல்தீப் யாதவ் – 8/10

இந்தியா vs இலங்கை 2017: ஒருநாள் தொடர் - இந்திய வீரர்களின் மார்க் 6
Kuldeep Yadav of India bats during the first One Day International ( ODI ) between India and Sri Lanka held at the Himachal Pradesh Cricket Association Stadium, Dharamsala on the 10th December 2017
Photo by Deepak Malik / BCCI / Sportzpics

சீனா மேன் பந்துவீச்சாளர் குல்தீப் யாதவிற்கு இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை. முதல் போட்டியில் அனைவரும் திணறிய போது தோனியுடன் ஜோடி சேர்ந்து பொறுமையாக விளையாடி 19 ரன் சேர்த்தார் குல்தீப். மூன்றாவது போட்டியில் சுந்தருக்கு பதிலாக வந்த குல்தீப் முக்கிய மூன்று விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

யுஸ்வேந்த்ர சஹால் – 8/10

இந்தியா vs இலங்கை 2017: ஒருநாள் தொடர் - இந்திய வீரர்களின் மார்க் 7

நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சஹால் முதல் போட்டியில் பந்துவீச வாய்ப்பு கிடைக்காததால் அவர் எந்த விக்கெட்டும் எடுக்கவில்லை. ஆனால் மீதம் உள்ள இரண்டு போட்டிகளிலும் மூன்று மூன்று விக்கெட்டுகளை எடுத்தார் சஹால்.

வாஷிங்டன் சுந்தர் – 7/10

Cricket, India, Washinton Sundar

தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆனார். அந்த போட்டியில் 1 விக்கெட் எடுத்த அவர் அடுத்த போட்டியில் காய்ச்சல் காரணமாக விளையாடவில்லை.

புவனேஸ்வர் குமார் – 8/10

Bhuvneshwar Kumar

கிங் ஆப் ஸ்விங் புவனேஸ்வர் குமார் இந்த தொடரில் சொல்லிக்கொள்ளும் படி விளையாடவில்லை என்றாலும் ஒவ்வொரு போட்டியிலும் எதிரணியின் முக்கியமான விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். இவர் சிறப்பாக வீசினால் அடுத்து வரும் தென்னாபிரிக்கா தொடரில் ஆதிக்கம் செலுத்தலாம்.

ஜேஸ்ப்ரிட் பும்ரா – 9/10

இந்தியா vs இலங்கை 2017: ஒருநாள் தொடர் - இந்திய வீரர்களின் மார்க் 8
Indian cricketer Jasprit Bumrah (L) celebrates after taking the wicket of Sri Lanka’s Niroshan Dickwella during the 2nd One Day International cricket match between Sri Lanka and India at the Pallekele international cricket stadium at Kandy, Sri Lanka on Thursday 24 August 2017. (Photo by Tharaka Basnayaka/NurPhoto via Getty Images)

யார்க்கர் கிங் ஜேஸ்ப்ரிட் பும்ரா இந்த தொடரில் நான்கு விக்கெட்டுகள் மட்டுமே எடுத்திருக்கிறார். ஆனால், ரன் எதுவும் வாரி வழங்கவில்லை. அடுத்து வரும் முக்கியமான தொடரில் இவரது உதவி இருந்தால் தென்னாப்ரிக்காவை எளிதாக வீழ்த்தி விடலாம்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *