Cricket, India, Sri Lanka, South Africa, Virat Kohli

தற்போது இந்திய அணி இலங்கை அணியுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இலங்கை அணியுடன் தொடர் முடிந்த பிறகு இந்திய அணி தென்னாப்ரிக்காவுக்கு செல்ல உள்ளது. இதனால், வேகப்பந்து வீச்சாளர்கள் தயாராகும் வகையில் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் மைதானத்தில் இந்திய அணி விளையாடவுள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய அணியுடன் ஒருநாள் தொடரில் விளையாட ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வந்தது. அப்போது இந்திய அணியின் நிர்வாகிகள் அதிகாரிகளிடம் தென்னாபிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு தயாராக இலங்கை அணியுடன் விளையாடவுள்ள டெஸ்ட் போட்டிகளின் மைதானங்கள் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் வகையில் தயார் படுத்த சொல்லிருந்தார்கள்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மைதான அதிகாரிகளிடம் ‘அழுத்தமாகவும் பவுன்சும் ஆகவேண்டும்’ என்று கேட்டிருந்ததாக தகவல் வந்தது.

இந்தியா vs இலங்கை 2017: அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டியின் மைதானமும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் 1

அடுத்து விளையாட போகும் நாக்பூர் மைதானமும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக தான் இருக்கும். தற்போது மைதானத்தில் இருக்கும் புற்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளார்கள், ஆனால் இரண்டு அணிகளும் இங்கு மோதும் போது புற்கள் இருக்கும். அடுத்த டெஸ்ட் போட்டி நாக்பூர் மைதானத்தில் நவம்பர் 24ஆம் தேதி தொடங்கவுள்ளது. அடுத்த போட்டி மட்டும் இல்லாமல் அடுத்த தொடரே இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கடினமாக தான் இருக்கும்.

ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் மோசமாக விளையாடினாலும், அடுத்த இன்னிங்சில் பேட்டிங்கில் கலக்கியது இந்திய அணி. மழை அதிகமாக வந்து அந்த மைதானம் முதல் இரண்டு நாட்கள் பந்துவீச்சாளர்களுக்கு சாதமாக இருந்ததால், இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் சுரங்கா லக்மலின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் இந்திய அணி 172 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

இந்தியா vs இலங்கை 2017: அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டியின் மைதானமும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் 2

ஆனால் முதல் இன்னிங்சில் பேட்ஸ்மேன்களை போல் இல்லாமல், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் புவனேஸ்வர் குமார் மற்றும் முகமது ஷமி ஆகியோர் தலா 4 விக்கெட் எடுத்து இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை தந்தார்கள்.

இந்தியா vs இலங்கை 2017: அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டியின் மைதானமும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் 3

இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி 352 ரன்னில் இருக்கும் போது டிக்ளர் செய்தது, அதற்கு பிறகு இலங்கை அணி 75 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்து பரிதாப நிலையில் இருந்தது, ஆனால், குறைந்த வெளிச்சம் காரணமாக ஆட்டத்தை முடித்து கொண்டார்கள். இதனால், முதல் டெஸ்ட் போட்டி சமனில் முடிந்தது.

இந்தியா vs இலங்கை 2017: அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டியின் மைதானமும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் 4

அடுத்த 18 மாதத்தில் இந்திய அணி தென்னாபிரிக்கா, இங்கிலாந்து , ஆஸ்திரேலியா என சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இதற்காக இந்திய அணி இப்போதில் இருந்தே தயார் படுத்தி கொள்கிறது. சிறந்த டெஸ்ட் அணியாக இருக்கும் இந்திய அணி, சொந்த மண்ணில் யார் என்று நிரூபித்து விட்டது. ஆனால், வெளிநாடுகளில் மோசமான சாதனைகள் உள்ளதால், அங்கு தான் இந்திய அணி யாரென்று காண்பிக்க வேண்டும்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *