Cricket, Shahid Afridi, Champions Trophy, Virat Kohli, India, Pakistan

ஜூன் 4-ஆம் தேதி விளையாடும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் இந்திய அணி வெற்றி பெரும் என முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் ஷாகித் அப்ரிடி கூறியுள்ளார்.

இந்த போட்டிக்கு முன்பு இரு அணிகளும் நல்ல பார்மில் உள்ளனர். இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடங்குவதற்கு முன்பு நியூஸிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுடன் வெற்றி பெற்றது இந்திய அணி.

முதல் பயிற்சி போட்டியில் நியூஸிலாந்தை 45 ரன் வித்தியாசத்தில், இரண்டாவது பயிற்சி போட்டியில் வங்கதேசத்தை 240 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. பாகிஸ்தானும் முதல் போட்டியில் வங்கதேசத்திடம் 341 ரன்கள் சேஸ் செய்ய, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது பயிற்சி போட்டி மழை காரணமாக கை விடப்பட்டது.

இரண்டு அணிகளுமே தெறி பார்மில் உள்ளதால், ஜூன் 4-ஆம் தேதி விறுவிறுப்பாக இருக்கும். ஆனால், இந்த போட்டியில் விராட் கோலியின் தலைமையில் விளையாட போகும் இந்திய அணி தான் வெற்றி பெரும் என முன்னாள் பாகிஸ்தான் அதிரடி வீரர் ஷாகித் அப்ரிடி கூறியுள்ளார்.

“ஒரு பாகிஸ்தானின் ஆதரவாளராக எந்த அணிக்கு எதிராகவும், முக்கியமாக இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற வென்றும் என்று தான் நினைக்க விடும். ஆனால், சமீபத்திய குறிப்பு படி, இந்திய அணி தான் பலமாக உள்ளது,” என அப்ரிடி கூறினார்.

இந்தியாவுக்கு எதிராக ஐசிசி தொடரில் கடைசியாக 2009 சாம்பியன்ஸ் டிராபியில் வெற்றி பெற்றது. அதற்கு பிறகு இரண்டு உலகக்கோப்பை (2011, 2015) மற்றும் சாம்பியன்ஸ் டிராபி (2013) -இல் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றது.

“விராட் கோலியின் தலைமையில் உள்ள அனைத்து பேட்ஸ்மேன்களுமே நல்ல பார்மில் உள்ளனர். விராட் கோலியும் சிறப்பாக விளையாடிவருகினார். 2012-ஆசிய கோப்பை மற்றும் 2015-உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலி சதம் அடித்துள்ளார்,” என அப்ரிடி மேலும் கூறினார்.

“வழக்கான இடைவெளியில் இந்திய விக்கெட்டுகளை எடுத்து கொண்டு இருக்க வேண்டும். ஆனால், யுவராஜ்-தோனி ஜோடி அபாயகரமானது,” என மேலும் கூறினார்.

“பேட்டிங் மட்டும் இல்லாமல், பீல்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் இந்தியா சிறப்பாக இருக்கிறது. சுழற்பந்தில் அஸ்வின் மற்றும் ஜடேஜா கலக்குகிறார்கள். புவனேஸ்வர் மற்றும் ஷமி இருவரும் சிறப்பாக பந்து வீசுகிறார்கள்,” என அவர் கூறினார்.

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *