ஆஸ்திரேலிய அணியுடனான முதல் மூன்று ஒரு நாள் போட்டியில் இருந்து ,சிகர் தவான் விடுக்கப்பட்டுள்ளார். அவரது மனைவியின் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அவர் கேட்டுக்கொண்டதான் படி அவருக்கு முதல் மூன்று ஒரு நாள் போட்டியில் இருந்து விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதே போன்று, இலங்கை அணியுடனான ஒரு நாள் தொடரில் 5ஆவது ஒரு நாள் போட்டிக்கு முன்னர் அவருடைய தாய்க்கு உடல் நிலை சரியில்லாமல் போனது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அவர் 5ஆவது ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் கலந்து கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் ஒருநாள் போட்டி சென்னையில் விளையாடவுள்ள நிலையில் ஷிகர் தவான் இந்திய அணியுடன் இல்லாத நிலையில் அவருக்கு பதிலாக அஜிங்க்யா ரஹானே தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது என இந்திய அணியின் துணைகேப்டன் ரோகித் சர்மா கூறினார்.
“கண்டிப்பாக தவானை இழக்கிறோம். கடந்த சில தொடர்களில் படைத்த சாதனைக்கு, தவானுக்கு முக்கிய பங்கு உண்டு. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து அவர் தெறி பார்மில் இருக்கிறார். அவர் இல்லாத காரணத்தினால், அவருக்கு பதிலாக விளையாட வீரர்கள் உள்ளார்கள். வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக விளையாடிய அஜிங்க்யா ரஹானேவுக்கு வாய்ப்புகள் உள்ளது,” என ரோகித் சர்மா தெரிவித்தார்.
“யார் யார் எங்கு விளையாடவேண்டும் என்று ஏற்கனவே கேப்டன் மற்றும் பயிற்சியாளர்கள் முடிவெடுத்து விட்டார்கள். லோகேஷ் ராகுல் நம்பர் 4வது இடத்தில் இறங்கவேண்டும் என்று கோலி நினைத்தார், இதனால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ரஹானே தொடக்கவீரராக களமிறங்கினார்,” என அவர் மேலும் கூறினார்.