இந்திய அணியின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பல நட்சத்திர வீரர்களை பார்த்துள்ளது. அதில் சில வீரர்கள் தொடக்கவீரராக களமிறங்கி, எதிரணியை நொறுக்க கூடியவர்கள். விரேந்தர் சேவாக், சுனில் கவாஸ்கர், கவுதம் கம்பிர் ஆகியோர் இந்திய டெஸ்ட் அணியின் வரலாற்றையே மாற்றியவர்கள் என்று சொல்லலாம். டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்த இந்திய தொடக்கவீரர்கள் பட்டியலை இப்போது பார்ப்போம்.
நவஜோட் சிங் சித்து – 8
இந்திய அணியின் முன்னாள் தொடக்கவீரர் பஞ்சாபை சேர்ந்த நவஜோட் சிங் சித்து 1983 இல் இந்திய அணிக்காக அறிமுகம் ஆகி 1999 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக கடைசியாக விளையாடினார். 16 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடிய சித்து இந்திய அணியின் தொடக்கவீரராக டெஸ்ட் போட்டிகளில் 8 சதம் அடித்து இந்த பட்டியலில் 5வது இடத்தில் இருக்கிறார்.
கவுதம் கம்பிர் – 9
இந்திய அணியின் நட்சத்திர வீரர் கவுதம் கம்பிர், தொடக்கவீரராக களமிறங்கி இந்திய அணிக்காக பல நல்ல இன்னிங்க்ஸை விளையாடி இருக்கிறார். இந்திய அணிக்காக தொடக்கவீரராக களமிறங்கி 9 டெஸ்ட் சதங்களை அடித்திருக்கிறார் கவுதம் கம்பிர்.
முரளி விஜய் – 10
தமிழகத்தை சேர்ந்த முரளி விஜய், இந்திய அணியின் நட்சத்திர வீரராக உருவெடுத்து வருகிறார். 2008 ஆம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணிக்காக அறிமுகம் ஆகிய முரளி விஜய், இது வரை (நவம்பர் 25, 2017) 10 சதம் அடித்திருக்கிறார். அவர் அடித்த 10 சதமுமே அவர் தொடக்கவீரராக அடித்தது தான்.
விரேந்தர் சேவாக் – 22
இந்திய அணியின் முன்னாள் அதிரடி தொடக்கவீரர் விரேந்தர் சேவாக், எதிரணி பந்துவீச்சாளர்களை நசுக்குவதில் வல்லவர் என்று நாம் அனைவருக்குமே தெரியும். டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்த நம்பர் 1 வீரராக இருந்த விரேந்தர் சேவாக், தொடக்கவீரராக 22 சதம் அடித்திருக்கிறார்.
சுனில் கவாஸ்கர்
முன்னாள் தொடக்க வீரர் சுனில் கவாஸ்கர், இந்திய அணியின் சிறந்த தொடக்கவீரர்களில் ஒருவர். ஒருகாலத்தில் இந்திய அணியின் சிறந்த தொடக்கவீரராக இருந்தவர். டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி கொண்டிருந்த சுனில் கவாஸ்கர், தொடக்கவீரராக 33 சதம் அடித்துள்ளார்.
கடைசியாக அப்டேட் செய்த நாள் – 25/11/2017