
சமீபத்தில் நடைபெற்ற இந்திய-நியூசிலாந்து இடையே திருவனந்தபுரத்தில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி ஃபீல்டிங்கை பார்த்தால் தெரிந்திருக்கு இந்திய அணியின் ஃபீல்டிங் தரம். அப்படி அற்புதமாக ஃபீல்டிங் செய்தனர் இந்திய இந்திய வீரர்கள்.
விராட் கோலி,ரவிந்திர ஜடேஜா, ஹர்திக் பாண்டியா, மணீஷ் பாண்டே, ரோகித் சர்மா, சிகர் தவான் என அணியின் இருக்கும் அனைத்து வீரர்களும் ஃபீல்டிங்கிற்கு பெயர் போனவர்கள். அப்படிப் பார்த்தால் இந்திய அணி உலகின் சிறந்த ஃபீல்டிங் அணி என்று சொல்வதில் தவறேதுமில்லை.
அதைத் தான் இந்திய அணியின் ஃபீல்டிங் கோச் ஆர்.ஶ்ரீதன் கூறியுள்ளார். அவர் கூறியதாவது,
ஆடுகளத்திற்குள் இறங்கிவிட்டால் இந்திய அணி உலகின் சிறந்த ஃபீல்டிங் அணியாக மாறிவிடும். இந்திய அணி தான் இதில் பெஸ்ட்.Sridhar admitted that India’s slip fielding needs to improve (Credits: AP)
இதற்கு மிகப்பெரிய காரணம் ஐ.பி.எல் தொடர் தான். இந்தியாவின் டி20க்கு உதவியதோ இல்லை, ஃபீல்டிங்கிற்கு மிகப்பெரிய அளவில் உதவியிருக்கிறது. இந்த கால கிரிக்கெட்டில் மைதானத்திற்குள் ஒளிந்துகொள்ள இயலாது. பந்து வராத இடமே இருக்காது. இது போன்ற 8 ஓவர் போட்டிகளில் ஒரு பந்தை விட்டால் கூட அது போட்டியையே மாற்றிவிடும்.
தற்போது அடுத்து நடைபெறும் டெஸ்ட் தொடருக்கும் சரியாக காயம் இல்லாமல் ஒரே வீரர்களை வைத்து விளையாடுகிறோம். இது போன்று வீரர்களை வைத்து ஒரு செட்டில் ஆன ஸ்லிப் கேட்ச்சர்களை வைத்துக்கொள்ளலாம். தற்போது ரகானே, முரளி விஜய், கே.எல் ராகுல், சிகர் தவான் என நல்ல வீரர்கள் உள்ளனர் அவர்களில் சரியாக ஸ்லிப் கேட்ச்சர்க்ளாக தேர்வு செய்ய வேண்டும்.

இந்திய அணி வீரர்களில் ஃபிட்னஸ் அதிகமாகிவிட்டது. உமேஷ் யாதவ் ஒரு அருமையான் ஃபீல்டர். பந்து வீச்சாளர் இப்படி அருமையாக ஃபீடு செய்வது பார்க்க அற்புதமாக இருக்கிறது. கடனஹ் 18 மாதத்தில் பும்ரா செம்மயாக முன்னேறி இருக்கிறார். முகமது சமி இந்தியாவின் சிறந்த பந்து வீச்சாளர். புவனேஷ்வர் ஒரு ஃபிட்டான பந்து வீச்சாளர். முகமது சிராஜ் நன்றாக வீசுகிறார். ஃபீல்டிங்கிலும் அசத்துகிறார். அப்படி பார்த்தால் பந்து வீச்சார்களும் அணியில் சிறந்த ஃபீல்டர்களாவர்.
தற்போது இந்திய அணி தான் உலகின் மிகச்சிறந்த ஃபீல்டிங் யூனிட்டாகும். தற்போது இன்னும் சிறிது மேம்படுத்தி சிறந்த கேட்ச்சர்களை உருமாக்கினால் இன்னும் நன்றாக இருக்கும்.
எனக் கூறினார் ஶ்ரீதர்.