இதுவரை ஐபிஎல் தொடரில் ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வருகிற 2022 ஐபிஎல் தொடரிலாவது எப்படியாவது கோப்பையை வெல்ல வேண்டும் என்று திட்டம் தீட்டி வருகிறது.
2021 ஐபிஎல் தொடருக்குப் பின் விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக இருக்கமாட்டேன் என்று தெரிவித்து விட்டதால் அந்த அணி எந்த வீரரை தக்கவைத்துக் கொள்ளலாம் எந்த புதிய வீரரை தனது அணியின் இணைக்கலாம் யாரை கேப்டனாக்கலாம் என்று திட்டமிட்டு வருகிறது.
இந்நிலையில் வருகிற 2022 ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தக்கவைத்துக்கொள்ள திட்டமிட்டிருக்கும் 3 வீரர்கள் பற்றி இங்கு காண்போம்.
விராட் கோலி
என்னதான் விராட் கோலி 2021 ஐபிஎல் தொடருக்கு பின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக இருக்க மாட்டேன் என்று தெரிவித்தாலும், நான் எப்பொழுதுமே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் தான் விளையாடுவேன் என்றும் தெரிவித்திருக்கிறார்.
கடந்த இரண்டு வருடங்களாக எதிர்பார்த்த அளவிற்கு விளையாடாத விராட் கோலி நிச்சயம் மீண்டும் தனது திறமையை நிருபிப்பார் என்பதால் 2022 ஐபிஎல் தொடரில் முதல் ஆளாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விராட்கோலி தக்கவைத்துக்கொள்ளும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்.
