ஐபில் 2018 பல சுவாரஸ்ய தகவல்களை நமக்கு அளித்திருக்கிறது. அதன் வரிசையில் இன்று நாம் பார்க்க இருப்பது ஏலம் போன பணத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக அடியவர்கள்.
ஐபில் 2018ம் ஆண்டுக்கான ஏலம் பலறையையும் ஆச்சர்ய படுத்தியது. குறிப்பாக பென் ஸ்டோக்ஸ், ஜெயதேவ் உனட்கட், மனிஷ் பாண்டே, KL ராகுல் போன்ற வீரர்களின் ஏல மதிப்பு 10 கோடிக்கும் மேலாக சென்றது வியப்படைய செய்தது. ஆனால் அதிக விலைபோன அனைவரும் சோபித்தார்களா என்றால் இல்லை என்பதே உண்மை.
வெகுசில வீரர்களே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி சில போட்டிகளில் தங்கள் அணியை வெற்றிப்பாகதைக்கு இட்டு சென்றிக்கின்றனர். அவர்களில் டாப் 5 வீரர்களை புள்ளி விவரத்தோடு பார்ப்போம்.
5. சஞ்சு சாம்சன் (ராஜஸ்தான் ராயல்ஸ்)

சாம்சன் பல சீன்கள் ஆடியிருந்தாலும் இந்திய அணிக்கு இதுவரை ஒரே ஒரு டி20 போட்டி மட்டுமே ஆடியிருக்கிறார். இவரை போன்ற வீரர்கள் மேல் மிகப்பெரிய தொகை விழும் பொழுது அது பாரமாக மாறவும் வாய்ப்பிருக்கிறது. இவர் இதுவரை இல்லாத அளவு 8 கோடிக்கு ராஜஸ்தான் அணிக்கு ஏலம் போயிருக்கிறார். ஆனால் இதையெல்லாம் மனதில் கொள்ளாமல் சிறப்பாக விளையடிருக்கிறார் அந்த அணிக்காக.
துவக்கத்தில் இருந்தே நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக, RCB அணிக்கு எதிராக 45 பந்துகளில் 92* ரன்கள் குவித்தார். அந்த போட்டியில் அவர் மட்டும் 10 சிக்கசர்கள் விளாசினார். Eliminator ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெறதாபோதிலும் அந்த அணிக்காக 50 ரன்கள் எடுத்திருந்தார். இறுதியாக, 15 இன்னிங்ஸ் ஆடி 441 ரன்கள் குவித்தார் இந்த ஐபில்லில். இந்த சில ஆடங்களுக்காக இவருக்கு 5வது இடம்.