4. க்ருனால் பாண்டியா (மும்பை இண்டியன்ஸ்)
மும்பை இந்தியன்ஸ் அணி தனக்காக சிறப்பாக ஆடும் வீரர்களை தக்கவைத்துக்கொள்ளவே முயற்சிக்கும். அதுபோலவே இந்த ஐபில்லில் RCB அணியால் 8.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இருந்தபோதிலும் RTM முறைப்படி அதே தொகைக்கு மும்பை அணியே திரும்ப பெற்றுக்கொண்டது.
இவர் இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஆன ஹார்திக் பாண்டியாவின் சகோதரர் ஆவர். இவரின் ஆட்டத்தின் மூலம் மதிப்புமிக்க வீரர்களின் பட்டியலில் 10வது இடம் பெற்றார். பௌலிங்கில் 12 விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியிருந்தாலும் எகானமி ரேட் 7.07 மட்டுமே. இவர் பேட்டிங்கில் 228 ரன்கள் குவித்து கிட்டத்தட்ட 146 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். இதனால் இங்கிலாந்து செல்லவிருக்கும் இந்தியா A அணியில் இடம்பெற்றிக்கிறார்.