3. ஆண்ட்ரூ டை (கிங்ஸ் லெவேன் பஞ்சாப்)
ஐபில்லில் நன்றாக விளையாடி வரும் வெகுசில ஆஸ்திரேலிய வீரர்களில் இவரும் ஒருவர். கிங்ஸ் லெவேன் பஞ்சாப் அணிக்காக 7.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். அந்த அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர் மட்டுமல்லாது இந்த தொடரிலும் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் முதலிடம் இவருக்கே. இந்த சீசனில் 3 முறை 4 விக்கெடுகள் வீழ்த்தினார். இது இதுவரை எந்த வீரரும் செய்யாத சாதனையாகும். இவர் அந்த அணிக்காக 14 போட்டிகள் விளையாடி 24 விக்கெட்டுகள் வீழ்த்தி PURPLE CAP தன் வசப்படுத்திக்கொண்டார்.
டி20 கிரிக்கெட்டில் அதிக ஹாட்-ட்ரிக் விக்கெடுகளை தன்வசம் கொண்டுள்ளார். இந்த சீசனில் அவருக்கு இல்லை என்ற போதிலும் சீரான இடைவெளியில் விக்கெடுகள் வீழ்த்தி அணிக்கு பல வெற்றிகளை பெற்று தந்தவர். இவருக்கு 7.2 கோடி குறைவே எனவும் பரவலாக பேசப்படுகிறது.