Cricket, England, South Africa, Test Cricket, James Anderson

சொந்த மண்ணில் 300 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த முதல் வேகப்பந்து வீச்சாளர் ஆனார் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன். தற்போது தென்னாப்ரிக்காவுடன் நடந்து கொண்டிருக்கும் இரண்டாவது டெஸ்டில் டீன் எல்கரின் விக்கெட்டை எடுக்கும் போது இந்த சாதனை படைத்தார்.

இதுவரை 400 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்துள்ள ஜேம்ஸ் ஆண்டர்சன், இங்கிலாந்து அணிக்காக அதிக டெஸ்ட் விக்கெட் எடுத்தவர் என்ற பெருமையை அவர் வைத்துள்ளார். முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே, அனில் கும்ப்ளே ஆகியவருக்கு பிறகு சொந்த மண்ணில் 300 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்தார் ஆண்டர்சன். சொந்த மண்ணில் 71 டெஸ்ட் போட்டிகள் விளையாடிய அவர், 300 விக்கெட் எடுத்துள்ளார். 2003-இல் முதல் டெஸ்ட் போட்டி விளையாடிய அவர், 124 போட்டிகளில் விளையாடி 400க்கும் மேல் விக்கெட் எடுத்துள்ளார்.

சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட் எடுத்த வேகப்பந்து வீச்சாளர்க்கான பட்டியலில் இரண்டாவது இடத்தில் கிளென் மெக்க்ராத், அவருக்கு அடுத்தப்படியாக மகாயா நிடினி, டேல் ஸ்டெய்ன் ஆகியோர் உள்ளனர்.

சொந்த மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட் எடுத்த வேகப்பந்து வீச்சாளர்கள்:

1. ஜேம்ஸ் ஆண்டர்சன் – 300 (71 போட்டிகள்)
2. கிளென் மெக்ராத் – 289 (66)
3. மகாயா நிடினி – 249 (53)
4. டேல் ஸ்டெய்ன் – 241 (46)
5. ஷான் பொல்லாக் – 235 (59)
6. ஸ்டுவர்ட் ப்ரோட் – 234 (59)
7. டென்னிஸ் லில்லி – 231 (44)
8. பிரெட் ட்ருமேன் – 229 (47)
9. கோர்ட்னே வால்ஷ் – 229 (58)
10. இயான் போத்தம் – 226 (59)
11. கபில் தேவ் – 219 (65)

Silambarasan Kv

Cricket Freak | Sehwag Devotee | Love to Write Articles!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *