இந்திய கிரிக்கெட் அணியின் நான்காவது இடத்துக்கு தினேஷ் கார்த்திக் தான் சரியான் ஆள் என முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி, முதலில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதன் முதன் இரண்டு போட்டியின் முடிவில், இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் உள்ளது.
இந்நிலையில் இரு அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை கான்பூரில் நடக்கிறது. இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் நான்காவது வீரராக களமிறங்கிய தினேஷ் கார்த்திக், அரைசதம் அடித்து அணியின் வெற்றிக்கு கைகொடுத்தார்.
தவிர, இப்போட்டிக்கு முன்னதாக நான்காவது வீரராக களமிறங்கிய போட்டியிலும் தினேஷ் கார்த்திக் அரைசதம் விளாசினார். இதையடுத்து இந்திய அணியின் ஒருநாள் போட்டிக்கு நான்காவது வீரராக களமிறங்க சரியான ஆள் தினேஷ் கார்த்திக் என முன்னாள் கேப்டன் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கங்குலி கூறுகையில்,’ தினேஷ் கார்த்திக் உண்மையில் சிறப்பான விளையாடினார். ஆனால் சுலப இலக்கை துரத்தியதால் அவருக்கு எந்த நெருக்கடியும் இல்லை. அதனால் இன்னும் சில போட்டிகள் சென்ற பின் தான் முழுமையான முடிவுக்கு வர முடியும். ஆனால் என்னைப் பொறுத்தவரையில் அந்த இடத்துக்கு தினேஷ் கார்த்திக் பொறுத்தமானவர் தான்.’ என்றார்.