ரஞ்சி டிராபி 2017-18 மூன்றாவது சுற்று ஆட்டம் அக்டோபர் 24ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கான கர்நாடக அணியில் இளம் வீரர்களான லோகேஷ் ராகுல் மற்றும் கருண் நாயர் ஆகியோரை அணியில் சேர்த்துள்ளார்கள். கர்நாடக அணியின் முதல் மூன்றாவது சுற்று போட்டியில் அக்டோபர் 24ஆம் தேதி ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது.
இந்திய அணிக்கு வந்த வேகத்தில் பல நல்ல இன்னிங்ஸ் விளையாடிய லோகேஷ் ராகுல், அதை தக்கவைத்து கொள்ள மறந்து விட்டார். இதனால் தொடக்க வரிசைக்கு மீண்டும் ஷிகர் தவான் வந்துவிட்டார். இதனால், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அவருக்கு விளையாட வாய்ப்புகளே கிடைக்கவில்லை.
வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஆஸ்திரேலியா என அனைத்து நாட்டின் அணிகளையும் துவம்சம் செய்தது இந்திய அணி. இதன் வரிசையில் அடுத்ததாக இந்தியாவில் விளையாடிய வருகிறது நியூஸிலாந்து அணி. நியூஸிலாந்து அணியுடன் இந்திய அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 22 ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கு முன்பு நியூஸிலாந்து அணியுடன் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அணி இரண்டு பயிற்சி போட்டிகளில் விளையாடவுள்ளது. முதல் பயிற்சி ஆட்டத்தில் வாரிய தலைவர் அணி 30 ரன் வித்தியாசத்தில் நியூஸிலாந்து அணியை வீழ்த்தியது.