நியூசிலாந்து அணியுடான டி20 தொடர் முடிந்தவுடன் ஜஸ்பிரிட் பும்ரா, அக்சர் படேல் மற்றும் யுஜவேந்திர சகால் ஆகியோர் தங்களது உள்ளூர் அணியான ரஞ்சிக் கோப்பை அணிக்கு சென்று ஆட மறுக்கப்பட்டுள்ளனர். தற்போது இந்திய அணி இலங்கையுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் ஆடிய மற்ற வீரர்கள் நேராக தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இலங்கை அணியுடனான் ஒருநாள் தொடர் துவங்க இன்னும் இரண்டு வாரங்கள் நேரம் இருக்கும் வேலையில் அவர்கள் ரஞ்சிக்கோப்பை தொடரில் ஆட போதிய நேரம் உள்ளது ஆனால், அவ்வாறு அவர்களை அனுப்பி காயமடைந்து விடுவார்கள் என அவர்களை ரஞ்சிக்கோப்பையில் ஆட அனுமதிகப்படவில்லை.

மேலும் கேடர் ஜாதவ் , தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி செய்து வருகின்றனர்.
இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறியதாவது,
ஹரியானா மாநில அணிக்காக ஆட சகால் அனுமதி கேட்டார். அனால, இந்திய அணி நிர்வாகத்தால் அவர் அனுமதிக்கப்படவில்லை. மேலும், அவர் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு அனுப்பபட்டார். நன்றாக ஆடிவரும் வீரர்களை காயமில்லாமல் பாதுகாப்பதே நோக்கம், ஒருநால் மற்றும் டி20 போட்டிகைல் நன்றாக ஆடிவரும் வீரர்களை உள்ளூர் போட்டிகளில் ஆடவைத்து காயடமடைந்து விட்டால் அது அணிக்கு பிரச்சனை ஏற்ப்படுத்தும். அதன் காரனமாகவே அவர்கள் உள்ளூர் போட்டிகளில் ஆட அனுமதிக்கப்படவில்லை
இதன் மூலம் அணியின் திட்டம் தெள்ளத் தெளிவாக்த் தெரிகிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள், டி20க்கு தனித்தனி அணியை வைத்துக்கொள்ள இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. இதனை எல்லாம் வைத்து பார்க்கும் போது, தற்போது டெஸ்ட் அணியில் ஆடி வரும் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோரை ஒருநாள் போட்டிகளில் கலட்டி விடுப்படுவார்கள் எனத்தெரிகிறது.
அதே போல், முதல் டெஸ்ட் போட்டியில் ஆடும் லெவனில் இல்லாத ரோகித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மாவில், டெஸ்ட் போட்டிகளில் மட்டும் பெடர் இருக்கும் இசாந்த் சர்மா மட்டுமே தனது ரஞ்சி அணிக்கு திருப்பி அனுப்பபட்டு அங்கு ஆட வைக்கப்பட்டார். ஆனால், பெரும்பாலும் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே ஆடி வரும் ரோகித் சர்மா அப்படி அனுப்பபடவில்லை.
மேலும், டெஸ்ட் முடிந்தவுடன் முகமது சமி மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் கலட்டி விடப்படுவார்கள் எனத் தெரிகிறது.