இந்திய அணிக்காக இது வரை பல கிரிக்கெட் வீரர்கள் விளையாடி உள்ளார்கள். ஒவ்வொரு தொடரிலும் ஒவ்வொரு வீரர்கள் சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள். அந்த வகையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அதிக ரன் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலை பார்ப்போம்.
விரேந்தர் சேவாக் – 491 vs இலங்கை, 2009
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விரேந்தர் சேவாக் 2009இல் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணியிடம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 491 ரன் அடித்து அசத்தினார். முதல் இரண்டு போட்டிகளில் பெரிய ஸ்கோர் அடிக்காக சேவாக், மூன்றாவது போட்டியில் 293 ரன் அடித்து அசத்தினார். மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றார் விரேந்தர் சேவாக்.
வி.வி.எஸ். லட்சுமண் – 503 vs ஆஸ்திரேலிய, 2000
2000ஆம் ஆண்டு கடைசியில் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடியது ஆஸ்திரேலிய அணி. முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரில் 503 ரன் அடித்து அசத்தினார். அதன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மறக்கமுடியாத 281 ரன் அடித்து ஆஸ்திரேலிய அணியை மிரள வைத்தார்.
சவுரவ் கங்குலி – 534 vs பாகிஸ்தான், 2007
2007ஆம் ஆண்டு கடைசியில் பாகிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரில் இரட்டை சதம் அடித்து அசத்திய கேப்டன் சவுரவ் கங்குலி, அந்த தொடரில் அதிக ரன் குவித்தார். அந்த டெஸ்ட் தொடரின் தொடர்நாயகன் விருதையும் பெற்றார் சவுரவ் கங்குலி.
விரேந்தர் சேவாக் – 544 vs பாகிஸ்தான், 2004
2004ஆம் ஆண்டு இறுதியில் பாகிஸ்தான் அணியை கதற வைத்தார் இந்திய அணியின் விரேந்தர் சேவாக். பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அரைசதம், சதம், இரட்டை சதம் என அடித்து பாகிஸ்தான் அணியை துவம்சம் செய்தார். அந்த தொடரில் 544 ரன் குவித்த விரேந்தர் சேவாக்,தொடர் நாயகன் விருதை தட்டி சென்றார்.
விராட் கோலி – 560 vs இலங்கை, 2017

2017ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் இந்தியாவிற்கு சென்று இலங்கை அணி டெஸ்ட் தொடரில் விளையாடிய போது, விராட் கோலியிடம் சரணடைந்தது. முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த விராட் கோலி, இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து அசத்தினார். அந்த தொடரில் 560 ரன் குவித்த விராட் கோலி, இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.