இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒருநாள் மற்றும் டி20 அணிகளின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார் மகேந்திர சிங் தோனி, ஆனால் அவர் டாஸ் போட மட்டும் தான் செல்வதில்லை. உலகக்கோப்பையை வென்ற கேப்டன் மகேந்திர சிங் தோனி, எங்கெங்கு வீரர்களை நிற்க வைக்கவேண்டும் என விராட் கோலிக்கு ஆலோசனைகள் கூறி வருகிறார்.
இந்தியா – ஆஸ்திரேலியா விளையாடிய முதல் ஒருநாள் போட்டியில் ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து ஐடியா கொடுத்து இந்திய வெற்றிக்கு காரணமாய் இருந்தார் தோனி. 21 ஓவரில் 164 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி, 11வது ஓவரில் அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லை இழந்த பிறகு, ஆஸ்திரேலியா அணி நம்பிக்கையை இழந்தது.
ஓவருக்கு 11 ரன் எடுத்தால் வெற்றி என்ற விகிதத்தில் இருந்தது, அந்த நேரத்தில் இந்திய பந்துவீச்சாளர்களை ஒரு கை பார்த்தார் மேக்ஸ்வெல், இதனால் அது ஒன்பதிற்கு குறைந்தது. மேக்ஸ்வெல்லை அவுட் ஆக்க, சஹாலிடம் ஐடியா கூறினார் தோனி.
“உள்ளே அல்லது வெளிய திரும்பும் படி பந்தை வீசு, எதாக இருந்தாலும் நல்லது,” என தோனி கூறினார்.
குல்தீப் யாதவ் ஓவர் வீச வந்த போது இதை தெரிவித்தார், ஆனால் அந்த ஓவரில் 4,6,6,6 என தெறிக்க விட்டார் மேக்ஸ்வெல். அடுத்த ஓவரை வீச வந்த சஹாலிடமும் அதே கூறினார் தோனி. அதன் படியே வீசிய சஹால் ஓவரில், இரண்டு பந்துகள் திணறிய மேக்ஸ்வெல், ஒரு சிக்ஸர் அடித்து அசத்தினார். ஆனால், அதற்கு அடுத்த பந்தை ஆப்-சைடு வீசிய பந்தை அடிக்க நினைத்த மேக்ஸ்வெல், அவுட் ஆகி வெளியே சென்றார். இதனால் ஆஸ்திரேலிய அணி 21 ரன் வித்தியாசத்தில் தோல்வி பெற்றது.