இந்திய டெஸ்ட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் மணிக்கட்டு அறுவை சிகிச்சைக்கு பிறகு இப்பொழுது காயத்தில் இருந்து மீளுகிறார்.தற்போது, முரளி விஜய் முகாமுக்கு சென்று பயிற்சியில் ஈடு பட்டு வருகிறார்.இதனால், இலங்கை தொடருக்கு அவர் இந்திய அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
“நான் காயத்தில் இருந்து மீண்டு வருகிறேன். இன்னும் சிறிது நாளில், முழு உடல்நலம் பெறுவேன். நான் பாதி குணமடைந்துவிட்டேன். மறுவாழ்வு பணிக்காக வரும்போது அவர் (ரஜினிகாந்த்) சிறந்தவர். சரியான நேரத்தில் அவருடன் வேலை செய்ய நான் அதிர்ஷ்டசாலி. நோக்கம் ஒரு நுட்பமான கிரிக்கெட் வீரராக இருக்க வேண்டும். எனக்கு ஒரு அறுவை சிகிச்சை இருந்தது. நான் நன்றாக இருப்பேன் என்று நம்புகிறேன், அதன்பிறகு நான் நன்றாக இருக்க வேண்டும். நான் என் உடற்பயிற்சி பற்றி கவனம் செலுத்தும் போது நானும் என் பேட்டிங் பற்றி யோசிக்க நேரம் கிடைத்தது, “அவர் காயம்-செயல்படுத்தப்பட்ட இடைவெளி பற்றி கூறினார்,” என முரளி விஜய் கூறினார்.
தர்மசாலாவில் நடந்த கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடிய இந்திய வீரர் முரளி விஜய், காயம் காரணத்தினால் இந்தியன் பிரீமியர் லீக் விளையாடவில்லை. அறுவை சிகிச்சைக்காக அவர் லண்டன் சென்றிருந்தார்.
சொந்த மண்ணில் நடந்த 13 டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஒரு போட்டிதான் அவர் விளையாடவில்லை. அவர் பெங்களுருவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. அந்த போட்டியில் அவருக்கு பதிலாக அணியில் அபினவ் முகுந்தை சேர்க்க பட்டனர்.
ஜூலை மாதம் இலங்கைக்கு சென்று விளையாடப்போகிறது இந்தியா. இதனால், நட்சத்திர வீரரான முரளி விஜய் இந்திய அணிக்கு சிறப்பாக விளையாடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருடன் சேர்ந்து காயத்தில் இருந்து மீளும் மற்றொரு வீரர் லோகேஷ் ராகுலும் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி, அந்த தொடருக்கு முரளி விஜயை தேர்ந்தெடுக்கப்பட்டால், எந்த பயிற்சி போட்டியும் இல்லாமல், இலங்கைக்கு செல்லுவார். இதே தான் லோகேஷ் ராகுலுக்கு. பேக்-அப் தொடக்கவீரர்களாக அபினவ் முகுந்த் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் அணியில் இடம் பெறுவார்கள்..