இந்திய அணியில் மீண்டும் பயிற்சியாளராக வேண்டும் அணில் கும்ப்ளே மும்முரம்

தற்போது இந்திய அணியில் அணில் கும்ப்ளே தான் பயிற்சியாளராக உள்ளார் ஆனால் அவரது பயிற்சி ஆண்டு காலம் இந்த ,சாம்பியன் ட்ரோபி முடிவு அடைந்ததும் எ அவரது பயிற்சி காலமும் முடிவடைகிறது.

மறுமுறையும் அணில் கும்ப்ளே இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ஆக ஆசை படுவதால் அவர் பிசிசிஐக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளர்.

அனில் கும்ளே மற்றும் இதர ஐந்து வேட்பாளர்களான விரேந்தர் சேவாக், டாம் மூடி, ரிச்சர்ட் பைபஸ், லால்சந்த் ராஜ்புட், மற்றும் டாட்டா கணேஷ் ஆகியோர் பி.சி.சி.ஐ. மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த முடிவை மூன்று குழு உறுப்பினராக புரிந்து ஆலோசனை நடத்த உள்ளார்கள், அவர்கள் தான் இந்த முடிவை எடுப்பார்கள் என தெரிகிறது.

கும்ளே விண்ணப்பம் தான் பிசிசிஐக்கு முதன் முதலாக வந்தது,சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் வி.வி.எஸ். லட்சுமண் ஆகியோருடன் இணைந்து, பி.சி.சி.ஐ., புதிய பயிற்சியாளரை நியமிப்பதற்கு ஆர்வமாக உள்ளது, சாம்பியன்ஸ் டிராபி முடிவடைந்ததும் புது பயிற்சியாளர் யார் என்று தெரியவரும்.

கும்ளே கடந்த ஆண்டின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அவருக்கு கீழ், ஐந்து டெஸ்ட் தொடர்கள் (மேற்கிந்திய தீவுகள், நியூசிலாந்து, இங்கிலாந்து, பங்களாதேஷ் மற்றும் ஆஸ்திரேலியா) அணி விளையாடி வெற்றிகொண்டது, அவரின் கீழ் இந்திய அணி மூன்று ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியது அதிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.

துரதிருஷ்டவசமாக, ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு, கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ஆகியோருக்கு இடையே ஒரு வதந்திகளால் வீழ்ச்சியடைந்த செய்தி ஊடகங்களில் இடம்பெற்றது.

எனவே சாம்பியன் ட்ரோபி முடிந்த உடன் புது பயிற்சியாளர் யார் என்று தெரிந்து விடும்.

Vignesh N: Cricket Lover | Movie Lover | love to write articles

This website uses cookies.