பிசிபி கிரிக்கெட் வாரியம் பிசிசிஐக்கு எதிராக இழப்பீடு வழக்கு தொடர உள்ளது 1

ஐசிசி காமிட்டுக்கு முன்னிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக இழப்பீடு வழக்கு தொடர உள்ளது.

2015இல் இருந்து 2023 ஆண்டு வரை பாகிஸ்தான் மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் ஆறு ஒரு நாள் தொடர்களில் விளையாட உள்ளதாக 2014ஆம் ஆண்டில் ஒப்பந்தம் செய்து கொண்டது. இதில் நான்கு ஒரு நாள் தொடர்கள் பாகிஸ்தானில் விளையாட ஒப்பந்தம் செய்து கொண்டது இந்தியா. ஆனால் தற்போது இந்தியாவின் மோசமான அரசியல் சூழ்நிலைகளால் இந்த ஒப்பந்தம் கைவிடப்பட்டது.

பிசிபி கிரிக்கெட் வாரியம் பிசிசிஐக்கு எதிராக இழப்பீடு வழக்கு தொடர உள்ளது 2

கடைசியாக இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் அணிகள் 2012இல் மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் மோதியது இதில் பாகிஸ்தான் அணி தொடரை வென்றது இதற்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் எந்த போட்டியிலும் விளையாடவில்லை. ஐசிசியால் நடத்தப்படும் தொடர்கள் மற்றும் ஆசியா கோப்பைகளில் மட்டுமே மோதுகிறது.

இந்த ஒப்பந்தம் கைவிட பட்டதால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு பெரும் இழப்பீடு நிகழ்ந்து உள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

பிசிபி கிரிக்கெட் வாரியம் பிசிசிஐக்கு எதிராக இழப்பீடு வழக்கு தொடர உள்ளது 3

இது குறித்து லண்டன் மற்றும் துபாயில் இரண்டு குழுகளும் பேச்சுவார்த்தை நடத்தியது.

” இந்த கூடத்தில் ஐ.சி.சி. தலைவர் சாஷாங் மனோகர், ஐ.சி.சி. தலைமை நிர்வாகி டேவ் ரிச்சர்ட்சன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் மூன்றாது கூட்டம் ஐசிசியில் நடக்கும் ” என கூறினார்கள்.

இந்த இழப்பீடு குறித்து இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் எந்த இழப்பீட்டையும் பாக்கிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு வழங்காது என கூறியுள்ளார்கள்.

“இரு நாடுகளுக்கும் இடையில் அரசியல் மற்றும் இராஜதந்திர நிலைமையின் காரணமாக, தங்கள் அரசாங்கம் பாக்கிஸ்தானுடனான ஒரு தொடருக்கு அனுமதி வழங்கவில்லை என்பதால், PCB க்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குவதில் எந்த சந்தேகமும் இல்லை,” என்று கூறினார்கள்.

ஆனால் இந்தியா கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ இதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவாக உள்ளது.

பிசிபி கிரிக்கெட் வாரியம் பிசிசிஐக்கு எதிராக இழப்பீடு வழக்கு தொடர உள்ளது 4

பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கூறியது :

“பி.சி.சி.ஐ., 2015 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளுக்கு இடையே ஆறு இருதரப்பு தொடர்களையும் விளையாடுவதாக வாக்குறுதி அளித்திருந்தது, ஆனால் இதுவரை ஒரு தொடர்கள் கூட விளையாடவில்லை. பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவர் இதற்கு இழப்பீடாக பிசிசிஐ 447 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இழப்பீடு வழங்காவிட்டால் நாங்கள் ஐசிசி முன்னிலையில் வழக்கு தொடர போவதாக பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

“எங்களின் இழப்பீடு பற்றிய கடிதத்திற்கு பிசிசிஐ எந்த முடிவையும் கூறவில்லை ஆனால் ஐசிசி உடன் கூடத்தில் கலந்து கொண்டு ஒரு முடிவை எடுக்க உள்ளதாக கூறியுள்ளார்கள்”

“2007ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணி எங்களுடன் எந்த கிரிக்கெட் தொடரையும் விளையாடவில்லை இதனால் எங்களுக்கு பெரும் இழப்பீடு வந்து உள்ளது” என பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

Vignesh N

Cricket Lover | Movie Lover | love to write articles

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *