இந்திய முன்னாள் கேப்டன் டோனி பற்றி யாரும் விமர்சிக்க வேண்டாம் எனவும் ஓய்வு குறித்து அவரே முடிவு செய்வார் எனவும் ராகுல் டிராவிட் கூறியுள்ளார். கும்ளே வெஸ்ட் இண்டீஸ் தொடருக்குப்பின் பயிற்சியாளே பதிவில் இருந்து விளகினார். அது போல் நானும் செல்ல வேண்டியா வாய்ப்புகள் வந்துவிடும் போல் இருக்கிறது. எனக் கூறினார் ராகுல் ட்ராவிட்

இரண்டு உலக கோப்பையை வென்று அவர் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பையையும், 2011-ல் ஒருநாள் போட்டி உலக கோப்பையையும் பெற்றுக்கொடுத்தார்.
2014-ம் ஆண்டு இறுதியில் டோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். கடந்த ஜனவரி மாதம் அவர் ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் அணியில் மட்டும் டோனி விளையாடி வருகிறார்.
36 வயதான டோனி 2019 உலககோப்பை வரை விளையாடுவாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு தொடரிலும் அவர் மீதான நெருக்கடி இருக்கிறது. 2019 உலக கோப்பைக்காக சிறந்த அணியை உருவாகும் பொருட்டு வீரர்களை தேர்வு குழு உருவாக்கி வருகிறது. சிறப்பாக ஆடினால் மட்டுமே டோனி அணியில் நீடிக்க முடியும்.
2019 உலககோப்பைக்கு முன்பே டோனி ஓய்வு முடிவை அறிவிக்க வேண்டும் என்று விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஓய்வு குறித்து அவர் இதுவரை எந்த கருத்து தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் டோனியை யாரும் விமர்சிக்க வேண்டாம் என்று முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் வலியுறுத்தி உள்ளார். தான் எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று டோனியே முடிவு செய்யும் அதிகாரமிக்கவராக என்ற கேள்விக்கு அவர் இந்த பதிலை தெரிவித்தார்.
இது தொடர்பாக ராகுல் டிராவிட் மேலும் கூறியதாவது:-
டோனி, வீராட்கோலி போன்ற சிறந்த வீரர்கள் தங்கள் ஓய்வை தாங்களே முடிவு எடுப்பார்கள். டோனியின் ஓய்வு குறித்து ரசிகர்கள் இடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவுகிறது. ஆனால் அவரை தேர்வு குழு தேர்ந்தெடுத்தால் இந்திய அணிக்காக அவர் விரும்பும் வரை விளையாட முடியும்.
இதனால் டோனியை விமர்சிக்க வேண்டாம். ஓய்வு எடுக்கும் முடிவை டோனியே எடுப்பார் என்று நமக்கு எப்படி தெரியும்? என்று சிலர் கேட்பதாலேயே அது உண்மையாக இருக்க வேண்டும் என்று அர்த்தமில்லை.
பயிற்சியாளர் விவகாரத்தில் கும்ப்ளேக்கு ஏற்பட்டது துரதிருஷ்டவசமானது. எனக்கு தெரிந்தவரை இந்தியாவை அதிக போட்டிகளில் வெற்றி பெற செய்ய வைத்தத்தில் அவருக்கு நிகர் இல்லை என்றே கூற வேண்டும். கும்ப்ளே ஒரு சாகப்தம்.
பயிற்சியாளர்களை விட வீரர்கள் அதிகாரம் படைத்தவர்கள்.
இவ்வாறு டிராவிட் கூறியுள்ளார்.