இந்திய அணியின் சிறந்த சூழல் பந்து வீச்சாளரான அஸ்வின் ரவிச்சந்திரன் அதிக சாதனைகளை படித்து கொண்டே உள்ளார். இவர் ஒரு நாள் போட்டிகள் மற்றும் இன்றி டெஸ்ட் தொடர்களிலும் சிறப்பாக செயல் பட்டு கொண்டு இருக்கிறார்.
தற்போது அஸ்வின் தான் குறைந்த போட்டிகளில் விளையாடி 250 விக்கெட்களை வேகமாக கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை படைத்து உள்ளார்.
தற்போது இந்திய அணி இலங்கை அணியுடன் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.
ஆட்டத்தின் விவரம் :
காலேயில் நடைபெற்ற இந்த டெஸ்டில், டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 600 ரன்களையும், இலங்கை 291 ரன்களையும், இந்தியா 2வது இன்னிங்சில், 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 240 ரன்களையும் எடுத்தது. இதன் மூலம் இலங்கை அணிக்கு 550 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இன்று 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, 245 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதனால்ல இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.
அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளையும், ஷமி மற்றும் உமேஷ் யாதவ் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். திமுத் கருணரத்னே அதிகபட்சமாக 97 ரன்கள் எடுத்தார்.