ஓபனிங் ஆட அவரு சரிப்பட்டு வரமாட்டார்; நம்பர் 3ல் இந்த வீரர் ஆடினால் சரியாக இருக்கும், அது விராட் கோலி இல்லை – அஷ்வின் ஓபன் டாக்!

இந்திய அணியில் நம்பர் 3, நம்பர் 4 இடம் உறுதி ஆகிவிட்டது. அதில் சந்தேகம் இல்லை. ஆனால் துவக்க வீரராக இவர் இறங்குவது சரிவராது என்று பேட்டியளித்திருக்கிறார் ரவிச்சந்திரன் அஸ்வின்.

டி20 உலககோப்பை தொடர் முடிவுற்றவுடன் இந்திய அணி நியூசிலாந்து சென்று டி20, ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் கட்டமாக டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. முதல் டி20 போட்டி மழை காரணமாக ரத்து ஆனது.

இத்தொடரில் ரோஹித் சர்மா, கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி போன்ற முன்னணி வீரர்களுக்கு இத்தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால் இந்த அணியை ஹர்திக் பாண்டியா வழி நடத்துகிறார்.

நியூசிலாந்து தொடரில் ரோகித் சர்மா இல்லாததால் இஷான் கிஷன் துவக்க வீரராக களமிறங்குவதற்கு பல வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும் மூன்றாவது இடத்தில் விராட் கோலி இல்லாததால் நிச்சயம் ஷ்ரேயாஸ் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.

ஐபிஎல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் வழக்கமாக சூரியகுமார் யாதவ் மூன்றாவது இடத்தில் களமிறங்குவார். அதேபோல் ஷ்ரேயாஸ் ஐயரும் மூன்றாவது இடத்தில் களமிறங்குவார் என்பதால், நியூசிலாந்து தொடரில் யார் அந்த இடத்தில் இறங்குவார்கள் என்ற சந்தேகம் நிலவி வருகிறது.

இதற்கு தனது யூடியூப் சேனலில் ரவிச்சந்திரன் அஸ்வின் கருத்து தெரிவித்திருக்கிறார். மேலும் துவக்க வீரராக யார் இறங்கினால் சரியாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

“சந்தேகத்திற்கு இடமின்றி அணியில் மூன்றாவது மற்றும் நான்காவது இடம் உறுதி ஆகிவிட்டது. ஷ்ரேயாஸ் மூன்றாவது இடத்திலும் சூரியகுமார் யாதவ் நான்காவது இடத்திலும் இறங்க வேண்டும்.

அவசரப்பட்டு சூரியகுமார் யாதவை மூன்றாவது இடத்திற்கு மாற்றி விட வேண்டாம். மீண்டும் அணியில் குழப்பம் நிலவ நேரிடும்.

ரிஷப் பண்ட் துவக்க வீரராக களமிறங்கினால், மிடில் ஆர்டரில் எந்த ஒரு இடது கை பேட்ஸ்மேனும் இல்லை. இஷான் கிஷன் துவக்க வீரராக இறங்குவது சரியாக இருக்கும். மிடில் ஆர்டரில் பன்ட் போன்ற இடதுகை பேட்ஸ்மேன்கள் நிச்சயம் வேண்டும். இனியும் அப்படி ஒருவர் இல்லாமல் இந்திய அணி திணறக்கூடாது.” என்றார்.

Mohamed:

This website uses cookies.