கிரிக்கெட் வீரர்கள் எப்போதும் அவர்களுக்கு வேண்டிய ஜெர்சி மற்றும் கிட் எண்ணை வைத்துக்கொள்வது புதிதல்ல. பல சமயங்களில் கிறிஸ் கெய்ல் போன்ற வீரர்கள் ட்ரிபில் டிஜிட் நம்பர் கூட வைத்துக்கொள்வது உண்டு. இந்திய அதிரடி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கூட ட்ரிபில் டிஜிட் எண்ணை தான் தன் கிட் எண்ணாக வைத்துள்ளார்.
சமீபத்தில் கூட ஷ்ரதுல் தகூர் சச்சின் டெண்டுல்கர் அணிந்து விளையாடிய 10ஆம் எண் ஜெர்சியை அணிந்து விளையாட அது சிறிய சர்ச்சையா ஆனது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்திய வீரர்கள் அணிந்துள்ள ஜெர்சி எண்ணையும் அதன் பின்னாள் ஒளிந்திருக்கு சூசக செய்தியையும் தற்போது பார்ப்போம்.
1.தோனி – நெ.7
இவருடைய இந்த எண் தற்போது ட்ரேட் மார்க்காகவே மாறிவிட்டது. அவர் இந்த எண்ணின் பெயரிலிலேயே ‘ZEVEN’ எண்ணும் ஒரு ஸ்பொர்ட்ஸ் வியர் மற்றும் க்லோந்திங் நிறுவனத்தை வைத்துள்ளார்.
இவருடைய இந்த எண்ணிற்க்கு காரணம் தோனி ஜூலை.7ஆம் தேதி பிறந்தார் எனபதாலேயே வைத்துள்ளார். காலபந்து ஜாம்பவான்களான கிறிஸ்டியானோ ரோனால்டோ மற்றும் டேவிட் பெக்காம் ஆகியோர் 7ஆம் எண் ஜெர்சியைத் தான் அணிந்து விளையாடினர்.
2.விராட் கோலி – நெ.18
இந்தியக் கேப்டனின் 18 ஜெர்சி எண்ணிற்கு காரணம் அவருடைய தந்தை டிசம்பர் 18ஆம் தேதி காலமானார். 2006ஆம் ஆண்டு விராட் கோலி தனது அறிமுக ரஞ்சி கோப்பை போட்டியின் போது அவரது தந்தை காலமானார், இதன் காரணமாக அவரது நினைவாக வைத்துள்ளார்.
3.யுவ்ராஜ் சிங் – நெ.12
இந்தியாவின் உலகக்கோப்பை நாயகனின் ஜெர்சி எண் 12. இதற்க்கு காரணம் இவர் 12ஆவது மாத 12ஆம் தேதி சண்டிகரின் 12ஆவது வார்டில் பிறந்துள்ளார். இந்த சென்டிமென்ட் காரணமாக அவர் 12ஆம் எண்ணில் ஜெர்சையை அணிந்து வருகிறார்.
4.ரோகித் சர்மா – நெ.45
முதலில் 9 என்ற எண்ணை அணிந்து விளையாடி இருக்கிறார் ரோகித். பின்னர் ஒற்றைபடை எண் ஆகாது என அவரது தாயின் வேண்டுகோளிற்கு இணங்க 45 என்ற எண்ணை அணிந்து விளையாடி வருகிறார்.
தற்போதும் 4+5=9 தான் வருகிறது என்று குசியாக இருக்கிறார் ரோகித் சர்மா.
5.ரவிச்சந்திரன் அஷ்வின் – நெ.99
சர்வதேச அளவில் கலக்கி வரும் தமிழக சுழல் சிங்கம் முதலில் 9 என்ற எண்ணை தான் தனது பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் அணிந்து விளையாடி வந்திருக்கிறார்.
6.ஹர்திக் பாண்டியா – நெ.228
இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா மட்டும் வித்யாசமாக மூன்று எண் கொண்ட ஜெர்சியை அணிந்திருப்பார். இதற்க்கு காரணம் இதுவரை கிரிக்கெட்டில் இவர் அடித்த அதிகபட்ச ரன் 228 அதனாலேயே இந்த எண்ணை அணிது ஆடுகிறார்.