இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த ரோகித் சர்மா, புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
மொகாலியில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 392 ரன்கள் குவித்தது. இலங்கை பந்து வீச்சாளர்களை திணறடித்த ரோகித் சர்மா, 153 பந்துகளில் 208 ரன்கள் குவித்தார்.

Photo by Deepak Malik / BCCI / Sportzpics
இதன் மூலம் ஒருநாள் போட்டியில் 3 முறை இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்தார். 2013ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 209 ரன்களும், அதே ஆண்டில் இலங்கைக்கு எதிரான போட்டியில் 264 ரன்களும் ரோகித் எடுத்திருந்தார். 264 ரன்களே சர்வதேச ஒருநாள் போட்டியில் ஒரு வீரரின் தனிப்பட்ட அதிகபட்ச ரன் என்பது குறிப்பிடத்தக்கது.
இரட்டை சதம் மூலம் ஒருநாள் போட்டியில் கேப்டனாக அதிக ரன்கள் குவித்த இரண்டாது வீரர் என்ற சாதனையையும் ரோகித் படைத்தார். விரேந்திர சேவாக் 219 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். நியூசிலாந்து வீரர் குப்தில், மேற்கு இந்திய வீரர் கிரிஸ் கெயில் மற்றும் இந்திய வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக் ஆகியோர் ஒரு முறை இரட்டை சதம் அடித்துள்ளனர்.
இது குறித்து ரோகித் சர்மாவின் அம்மா, பூர்ணிமா சர்மா கூறியதாவது அவன் மேலும் ஒரு இரட்டை சதம் அடித்தால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாகி உள்ளோம். இன்று (டிச.13) அவனுக்கு திருமண நாள், இதனை எங்கல் மகிழ்ச்சி இரட்டிப்பாகிவிட்டது. எங்களுக்கு மிகவும் சர்ப்ரைஸாக இருந்தது. முதலில் சதம் அடித்தான் பின்னர் 150, அதன்பின் உடனடியாக 200யை கடந்து எங்களை ஆச்சரியப்படுத்திவிட்டான்.
வெறும் ஃபோர்களும் சிக்ஸர்களுமாக அடித்து துவமசம் செய்துவிட்டான். ஒரு தாயாக எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. என்னை நன்றாக பெருமைபடுத்திவிட்டான் ரோகித். இந்திய அணிக்கு கேப்டனாக எனக்கு இன்னும் பெருமை சேர்த்துவிட்டான். எனக் கூறினார் ரோகித்தின் அம்மா பூர்ணிமா சர்மா.