இந்திய அணியின் முன்னாள் அதிரடி துவக்க ஆட்டகாரரான சேவாக், இந்திய அணி 2011ம் ஆண்டு உலககோப்பையை வெல்ல காரணம் சச்சின் கொடுத்த யோசனை தான் என தனியார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொழுது தெரிவித்தார்.

2011ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி துவக்கத்தில் இரண்டு விக்கெட்டுகள் இழந்து தவித்து கொண்டிருந்தது. அப்பொழுது விராட் கோலியும் கம்பீரும் பேட்டிங் செய்து கொண்டிருந்தனர்.
அடுத்து விராத் கோலி அவுட் ஆக, அடுத்து நல்ல ஃபார்மில் இருந்த யுவராஜ் சிங் தான் களமிறங்குவார் என எதிர்பார்த்தபொழுது இந்திய அணியின் கேப்டன் தோனி களமிறங்கினார்.
இதுகுறித்து தனியார் நிகழ்ச்சியில் பேசிய சேவாக், அடுத்த விக்கெட் யார் விழுகிறார் என்பதை பொறுத்து யுவராஜ் இறங்குவரா இல்லை தொனி இறங்குவரா என முடிவு செய்வோம் என பேசினோம். களத்தில் இடது வலது என்ற பாணியில் பேட்ஸ்மேன் இறங்கினால், எதிரணியை கலங்க செய்ய ஏதுவாக இருக்கும்.
அதன்படி வலது கை ஆட்டக்காரர் விராத் அவுட் ஆனால் டோனியை இறக்கலாம். கம்பீர் வெளியேறினால் யுவராஜ் இறங்கலாம் என பேசினோம். இதற்கு தோனியும் சம்மதம் தெரிவித்தார். அதற்கேற்ப, விராத்துக்கு அடுத்து தோனி இறங்கினார்.
தோனி அதுவரை சரிவர சோபிக்காததால், பின்னால் ஆடுவதற்கு விக்கெட் வேண்டும் என அதற்கு அடுத்து இறங்கிக்கொள்ள யுவராஜ் சிங் மறுப்பு ஏதும் இன்றி ஒப்புக்கொண்டார்.
நாங்கள் தெரிவிப்பதற்கு முன்னாலேயே இந்த யோசனை தோனியின் மனதில் இருந்திருக்கிறது என்பது தோனியின் சுயசரிதை படம் பார்த்த பின்பு தான் எங்களுக்கும் புரிந்தது.
இவர் முன்னால் இறங்குவதற்கு காரணம் சுழற்பந்து ஜாம்பவான் ஆன முத்தையா முரளிதரனை செட்டில் ஆக விட கூடாது என்பது தான் என்பதையும் படம் பார்த்து தான் தெரிந்து கொண்டோம் என நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
மேலும், இறுதி போட்டியில், 79 பந்துகளை 92 ரன்கள் விளாசி, ஆட்டனயகன் விருதையும் தட்டி சென்றார் கேப்டன் தோனி. பின்பு நிகழ்ந்தது அனைத்தும் சரித்திரமே.