முன்னாள் இந்திய அணியின் கேப்டனும் தற்போது அணியின் பயிற்ச்சியாளருமான ரவி சாஸ்திரி மறைமுகமாக முன்னால் கேப்டன்களை தன் கருத்துக்கள் மூலம் அவமதித்தார என கேள்வி எழுந்துள்ளது.

India will play three Tests, five one-day internationals and a Twenty20 game in Sri Lanka. The first Test starts on July 26 in Galle. / AFP PHOTO / LAKRUWAN WANNIARACHCHI (Photo credit should read LAKRUWAN WANNIARACHCHI/AFP/Getty Images)
தற்போதய அணியின் கேப்ட்டன் விராட் கேலி தொடர்ந்து 8 டெஸ்ட் தொடர்களை வென்று சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் செய்த இந்த சாதனையானது அவர் கேப்டன் பொருப்பேற்ற மூன்றே வருடங்களில் செய்து தனது கேப்டன் சிப் திறமையை வெளிக்கொணர்ந்துள்ளார். இதனை தனது கருத்தாக தெரிவித்த ரவி சாஸ்திரி, விராட் கோலி இந்திய கேப்டங்களில் மிகச்சிறந்த கேப்டன். இவரை பொல முன்னால் முன்னால் கெப்ட்டன் கூட செயல்படவில்லை எனக்கூறி மறைமுகமாக முன்னால் கேப்டங்களான சவ்ரவ், கங்குலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை மறைமுகமாக தாக்கி பேசியதாக தெரிகிறது.
ரவி சாஸ்திரியின் இந்த கருத்து தற்ப்போது ஊடகங்கள் மற்றும் சமூக வலை தளங்களில் விவாதப் பொருளாக மாரியுள்ளது. அவர் குறிப்பிட்டது சச்சின் டெண்டுல்கரை தானா? இல்லை சவ்ரவ் கங்குலியா? என அனைவரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 23 வருடங்களுக்கு பின்னர் இல்ங்கை மண்ணில் இலங்கைக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் வென்றுள்ளது குறிப்பிடதக்கது. இச்சாதனையை முன்னால் கேப்டன் அசாருதின் 1993 ஆம் ஆண்டு படைத்தார். இதுவரை அசாருதின் மட்டுமே இலங்கை மண்ணில் நடந்த தொடரில் இலங்கை வீழ்த்தி தொடரை வென்றவராக இருந்தார். தற்போது விராட் கோலியும் அந்த சாதனாப் பட்டியளில் இணைந்துள்ளார்.
ஆனால் முன்னால் கேப்டன் கங்குலி மற்றும் சச்சின் டெண்டுல்கர் இது போன்று இலங்கை மம்மீல் தொடறை வென்றதில்லை. சச்சின் டெண்டுல்கர் கேப்ட்டனாக இருந்த காலகட்டத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எதுவும் செய்யவில்லை. மேலும், அந்த தொடரின் போது தான் இலங்கை இந்தியாவிற்கு எதிராக உலகிலேயே அதிக ரன்கள் அடித்த அணியாக சாதனை படைத்து 953/6 ரன்கள் குவித்தது.
மேலும் கங்குலி கேப்டனாக இருந்தபோது இந்தியா, இலங்கை மண்ணில் 1-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை விட்டது. அந்த தொடரில் முக்கிய வீரர்களை அணில் கும்ளே, சச்சின் டெண்டுல்கர், மற்றும் VVS லட்சுமணன் ஆகியோர் ஆடவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இலங்கை மண்ணில் நடந்த ஒரு தொடரை பார்த்தாலும் சச்சின் டெண்டுல்கர் 3-0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்துள்ளார். ஆனால் கங்குலி 2002 ல் இலங்கையில் நடந்த சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்திய அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச்சென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன்படி பார்த்தால் கேப்டன்சிப்பில் மோசமான சாதனை வத்திருக்கும் சச்சின் டெண்டுல்கரைத்தான் ரவி சாஸ்திரி தாக்கிப் பேசியுள்ளதாக தெரிகிறது. எதுவாயினும் விமர்சனம் ஆரோக்யமாக இருந்தால் அனைவருக்கும் நல்லது.