6. குர்ட்னி வால்ஸ் ரன் அவுட் செய்யாமல் விட்டது…
1987ம் ஆண்டு உலககோப்பையில் பாக்கிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. இதில், கடைசியில் 2 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் குர்ட்னி பது வீசும் பொழுது, மறுமுனையில் இருந்த ஜாபர் பந்து வீசும் முன்னமே ஓட துவங்கிவிட்டார். குர்ட்னி நினைத்தால் ரன் அவுட் செய்திருக்கலாம். ஆனால், இது நியாயமானதாக இருக்காது என அப்படியே விட்டுவிட பாக்கிஸ்தான் இறுதி போட்டிக்கு சென்றது.