2. சித்தார்த் கவுல்
ரஞ்சி மற்றும் உள்ளூர் தொடர்களில் தொடர்ச்சியாக உறுதியாக ஆடிக்கொண்டிருப்பவர் சித்தார்த் கவுல். பஞ்சாப் அணியை சேரந்த இவர் 2008ல் விராட் கோலி தலைமையிளான U-19 அணியில் விளையாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நட்ந்த தென்னாப்பிரிக்க ஏ அணியுடனான் தோடரில் இரண்டாவது அதிகபட்ச விக்கெட்களை வீழ்த்தியவர் இவர்தான். மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.ஐபிஎல் லும் ஹைதராபாத் அணிக்காக ஆடிய இவர் 10 போட்டிகளில் ஆடி 16 விக்கெட்டுகளை சாயத்துள்ளார். இந்த வருடம் நடைபெற்ற ரஞ்சி கோப்பை தொடரில் 8 போட்டிகளில் ஆடியுள்ள அவர் 35 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதே போல விஜய் ஹசாரே கோப்பையிலும் 5 போட்டியில் 12 விக்கெட்டுகளை சாயத்துள்ளார். இவருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷரடுல் தகூருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.