3. தினேஷ் கார்த்திக்
நம்ம தமிழ்நாட்டு வீரர் தினேஷ் கார்த்திக். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன இவர் கடந்த பல ஆண்டுகளாக அணியில் தோனி இருப்பதனால் வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் ஆடி வருகிறார். மேற்கிந்திய தீவுகள் அணியுடனான ஒரு நாள் தொடரில் நன்றாக செயல்பட்டுள்ளார். ஆனாலும் தேர்வுக் குழு அவரை தேர்வு செய்யவில்லை.
கடந்த விஜய் ஹசாரே கோப்பையிலும் 9 போட்டியில் ஆடி 86.71 சராசரியில் 607 ரன்களை குவித்துள்ளார். ரஞ்சி கோப்பை தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 704 ரன்கள் குவித்துள்ளார். அதில் சராசரி 54.15 ஆகும். துலீப் டிராபியில் 3 போட்டிகள் 211 ரன்னும் தியோதர் டிராபியில் 3 போட்டிகள் ஆடியுள்ள அவர் 247 ரன்களையும் குவித்துள்ளார். இருப்பினும் அவரைப் தேர்வுக்குழு அவரை புறக்கணித்ததில் அவர் ஏமாற்றம் அடைந்திருப்பார்.