4. யுவராஜ் சிங்
இவருக்கும் இன்னொரு வாய்ப்பு வழங்கப்படும் என நினைத்தவர் அனைவருக்கும் இன்று ஏமாற்றமே மிஞ்சியது. அனுபவம் வாய்ந்த வீரர் இவர். மேலும் சமீபத்திய இங்கிலாந்து உடனான தொடரில் 150 ரன்கள் விளாசியது குறிப்பிடத்தக்கது.
மேலும் சாம்பியன்ஸ் டிராபி முதல் லீக் ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தானை எதிர்த்து ஆடிய போது தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் அரை சதம் கடந்தார் யுவராஜ் சிங். ஆனாலும் தேர்வுக் குழு அவரை தேர்வு செய்யவில்லை.