ஒருநாள் போட்டிகளில் 300 மற்றும் 300 ரன்னுக்கு மேல் அடித்த அணிகள் பட்டியலில் முதல் இடத்தில் இந்திய அணி இருப்பதில் இந்த வித ஆச்சரியமும் இல்லை. கடந்த 15 வருடமாக இந்திய அணியிடம் பலம் வாய்ந்த பேட்டிங் வரிசை இருக்கிறது. இதனால் தான் இந்திய அணி அதிக முறை 300 ரன்னுக்கு மேல் ஒருநாள் போட்டிகளில் அடித்து வருகிறது. ஒருநாள் போட்டிகளில் 300 மற்றும் 300க்கு மேல் அடித்த முதல் 10 அணிகளை பார்ப்போம்:
வங்கதேசம் – 11
தற்போது வங்கதேச அணியின் பேட்டிங் சற்று முன்னேறி விட்டது. இதனால், சமீப காலமாக பெரிய பெரிய அணிகளுடன் வெற்றி வருகிறது. வங்கதேச அணியின் ஆட்டத்தை மாற்ற கூடிய சில வீரர்கள் இருக்கிறார்கள். கடந்த 12 மாதங்களாக வங்கதேச அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இந்த அணி இதுவரை ஒருநாள் போட்டிகளில் 11 முறை 300 அல்லது 300 ரன்னுக்கும் மேல் அடித்திருக்கிறது.
ஜிம்பாப்வே – 25
இதுவரை ஒருநாள் போட்டிகளில் 23 முறை 300 அல்லது 300 ரன்னுக்கும் மேல் அடித்திருக்கிறது ஜிம்பாப்வே அணி. 1983ஆம் ஆண்டு வந்த ஜிம்பாப்வே அணி சில நட்சத்திர வீரர்களுடன் சிறப்பாக விளையாடியது. 1996-2002 காலத்தில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய அணிகளையும் ஜிம்பாப்வே அணி வீழ்த்தி உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் – 38
இதுவரை ஒருநாள் போட்டிகளில் 38 முறை 300 அல்லது 300 ரன்னுக்கும் மேல் அடித்திருக்கிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. கடந்த 20 ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுவருகிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. இதுவரை இரண்டு முறை உலகக்கோப்பையை வென்றுள்ளது வெஸ்ட் இண்டீஸ்.
நியூஸிலாந்து – 52
இதுவரை ஒருநாள் போட்டிகளில் 52 முறை 300 அல்லது 300 ரன்னுக்கும் மேல் அடித்திருக்கிறது நியூஸிலாந்து அணி. ஒருநாள் போட்டிகளில் பலம் வாய்ந்த அணிகளில் இந்த அணியும் ஒன்று. பல நட்சத்திர வீரர்களை வைத்து கொண்டிருந்தும், ஒரு முறை கூட உலகக்கோப்பையை வென்றதில்லை. 2000ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி வென்ற நியூஸிலாந்து அணி இதுவரை 6 முறை உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. 2015 உலகக்கோப்பையில் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் மண்டிபோட்டது.
இங்கிலாந்து – 58
கிரிக்கெட் விளையாட்டை கண்டுபிடித்த இங்கிலாந்து அணி இதுவரை ஒருநாள் போட்டிகளில் 58 முறை 300 அல்லது 300 ரன்னுக்கும் மேல் அடித்திருக்கிறது. பல சிறந்த வீரர்களை வைத்து கொண்டிருக்கும் இங்கிலாந்து அணி, இதுவரை ஒருமுறை கூட 50 ஓவர் உலகக்கோப்பையை வென்றதில்லை.
இலங்கை – 66
1996ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற இலங்கை அணி இதுவரை ஒருநாள் போட்டிகளில் 66 முறை 300 அல்லது 300 ரன்னுக்கும் மேல் அடித்திருக்கிறது. 1992ஆம் ஆண்டு 300 ரன்னை சேஸ் செய்த முதல் அணி என்ற பெருமையை பெற்றது மற்றும் ஒருநாள் போட்டியில் அதிக ரன் அடித்த அணியும் இலங்கை அணி தான். இந்த அணியிடம் நல்ல பேட்டிங் வரிசை இருப்பதால், சமீப காலமாக சில போட்டிகளில் 400 ரன்னுக்கும் மேல் அடித்திருக்கிறது.
பாகிஸ்தான் – 69
1992ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற பாகிஸ்தான் அணி இதுவரை ஒருநாள் போட்டிகளில் 69 முறை 300 அல்லது 300 ரன்னுக்கும் மேல் அடித்திருக்கிறது. கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த பேட்டிங் மற்றும் பவுலிங் வரிசை கொண்ட அணி. பெரிய அணிகளை வீழ்த்தும் பாகிஸ்தான் அணி, சிறிய அணிகளிடம் தோற்றுவிடும்.
தென்னாபிரிக்கா – 76
ஒருநாள் போட்டிக்கான சிறந்த அணிகளில் தென்னாப்ரிக்கா அணியும் ஒன்று. இந்த அணி துவரை ஒருநாள் போட்டிகளில் 76 முறை 300 அல்லது 300 ரன்னுக்கும் மேல் அடித்திருக்கிறது. ஒருநாள் மற்றும் ஒருநாள் உலகக்கோப்பையில் தொடர்ந்து 400 ரன்னுக்கும் மேல் அடித்த ஒரே அணி தென்னாபிரிக்கா தான். சிறந்த வீரர்களை வைத்து கொண்டிருந்தும், ஒருமுறை கூட உலகக்கோப்பையை இந்த அணி வென்றதில்லை.
ஆஸ்திரேலியா – 96
இதுவரை ஒருநாள் போட்டிகளில் 96 முறை 300 அல்லது 300 ரன்னுக்கும் மேல் அடித்திருக்கிறது ஆஸ்திரேலிய அணி. சிறந்த பேட்டிங் வரிசையை கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணி 1987, 1999, 2003, 2007 மற்றும் 2015ஆம் ஆண்டு நடந்த உலககோப்பைகளை வென்றுள்ளது. சிறந்த பேட்டிங் வரிசை மட்டும் இல்லாமல் இந்த அணியிடம் சிறந்த பந்துவீச்சாளர்களும் இருக்கிறார்கள்.
இந்தியா – 100
ஒருநாள் போட்டிகளில் 300 மற்றும் 300 ரன்னுக்கு மேல் அடித்த அணிகள் பட்டியலில் முதல் இடத்தில் இந்திய அணி இருப்பதில் இந்த வித ஆச்சரியமும் இல்லை. கடந்த 15 வருடமாக இந்திய அணியிடம் பலம் வாய்ந்த பேட்டிங் வரிசை இருக்கிறது. இதனால் தான் இந்திய அணி இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. ஒருநாள் போட்டிகளில் 300 அல்லது 300க்கும் மேல் 100 முறை அடித்த முதல் மற்றும் ஒரே அணி இந்தியா தான். சிறந்த பேட்டிங் வரிசை வைத்து கொண்டிருக்கும் இந்திய அணி 1983 உ.கோ., 2007 டி20 உ.கோ., 2011 உ.கோ., 2013 சாம்பியன்ஸ் டிராபிகளை வென்றுள்ளது.