இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு குட்-பை  சொல்கிறார் பயிற்சியாளர் பெய்லிஸ் !! 1

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து விலக பெய்லிஸ் திட்டமிட்டுள்ளார்.

மண்ணை கவ்விய இங்கிலாந்து அணி;

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுடன் வரலாற்று சிறப்புமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்றது.

5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் ஒரே ஒரு போட்டியை மட்டும் போராடி டிரா செய்த இங்கிலாந்து மற்ற போட்டிகளில் ஆஸ்திரேலியாவிடன் படுதோல்வி அடைந்தது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு குட்-பை  சொல்கிறார் பயிற்சியாளர் பெய்லிஸ் !! 2

135 வருட வரலாற்று சிறப்புமிக்க இந்த தொடரில் இங்கிலாந்து அணி அடைந்த படுதோல்விக்கு பிறகு, இங்கிலாந்து அணி வீரர்கள் மீதும், அந்த அணியின் பயிற்சியாளர்கள் மீது கடுமையான விமர்ச்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதிவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர்  பெய்லிஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பெய்லிஸ் கூறியதாவது;

இங்கிலாந்து கிரிக்கெட் அணியுடனான எனது ஒப்பந்தம் வரும் 2019ம் ஆண்டுடன் நிறைவடைகிறது. இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக நீடிக்கும் வாய்ப்பு எனக்கு இருந்தாலும், பயிற்சியாளராக தொடர்வதில் எனக்கு துளியும் விருப்பமில்லை.

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு குட்-பை  சொல்கிறார் பயிற்சியாளர் பெய்லிஸ் !! 3

இதனால் 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் எனது பதவியில் இருந்து விலக திட்டமிட்டுள்ளேன். நான் பயிற்சியாளராக இருந்த இந்த காலகட்டத்தில் என்னால் ஒரு பெரிய மாற்றத்தை கொண்டு வர முடியவில்லை. சர்வதேச கிரிக்கெட் அரங்கில் தலைசிறந்த ஒரு நான்கு வீரர்களை உருவாக்க முடிந்தது எனக்கு கிடைத்த ஒரு வெற்றி என்று தெரிவித்துள்ளார்.

பெய்லிஸ் பயிற்சியில் இங்கிலாந்து அணி;

பெய்லிஸ் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டப்பின் இங்கிலாந்து அணி இதுவரை நடைபெற்றுள்ள கிரிக்கெட் போட்டிகளில் 15 வெற்றிகளையும், 18 தோல்விகளையும் சந்தித்துள்ளது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு குட்-பை  சொல்கிறார் பயிற்சியாளர் பெய்லிஸ் !! 4

பென் ஸ்டோக்ஸ் மீண்டும் அழைப்பு ;

ஆஷஸ் தொடரில் படுதோல்வி அடைந்துள்ள இங்கிலாந்து அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணியுடனான ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது.

இந்த தொடருக்கு பின் ஆஸ்திரேலியா இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து இடையேயான முத்தரப்பு டி.20 தொடர் நடைபெற உள்ளது.

பிப்ரவரி மாதம் துவங்க உள்ள இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு குட்-பை  சொல்கிறார் பயிற்சியாளர் பெய்லிஸ் !! 5

இதில் அடிதடியில் ஈடுபட்டு சிறைக்கு சென்ற இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வாய்ப்பளித்துள்ளது.

வழக்கு விசாரணையில் இருந்து போலீசார் அவரை விடுவிக்கும் பட்சத்தில், டி20 போட்டிகளில் நிச்சயம் விளையாடுவார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

முத்தரப்பு தொடருக்கான இங்கிலாந்து அணி;

இயான் மார்கன் (கேப்டன்), சாம் பில்லிங்ஸ், ஜோஸ் பட்லர், டாம் கரன், லியாம் டாவ்சன், அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டான், டேவிட் மாலன், லியாம் பிளங்கெட், அடில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் வின்ஸ், டேவிட் வில்லி, மார்க் வுட்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *