முன்னாள் இந்திய அணியின் அனில் கும்ப்ளேவுக்கும் இந்திய கேப்டன் விராட் கோலிக்கும் தகராறு ஏற்பட்டதால் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே ராஜினாமா செய்தார் என தகவல்கள் வந்தது. அனில் கும்ப்ளே பயிற்சியாளராக இருக்கும் போது இந்திய அணி பல வெற்றிகளை ருசித்தது.
அனில் கும்ப்ளே பயிற்சியாளராக இருக்கும் போது வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, வங்கதேசம், நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் இந்திய அணி வெற்றி பெற்றது. இது மட்டும் இல்லாமல், சாம்பியன்ஸ் டிராபி 2017 இறுதி போட்டிக்கும் சென்றது.
எனினும், அனில் கும்ப்ளேவுக்கும் இந்திய கேப்டன் விராட் கோலிக்கும் தகராறு ஏற்பட்டதால் பயிற்சியாளர் பதவியில் இருந்து அனில் கும்ப்ளே ராஜினாமா செய்தார்.
தற்போது, கேப்டனாக இருக்கும் விராட் கோலி, கேப்டனாக இருக்கும் போது சிறப்பாக விளையாடமுடியவில்லை என கேள்விகள் எழுந்துள்ளன.
“அனில் கும்ப்ளே ராஜினாமாவுக்கு விராட் கோலியும் ஒரு காரணமாக இருக்கலாம். அவர் கேப்டனாக இருக்கும் போது சிறப்பாக விளையாடவேண்டும், இல்லையென்றால் அந்த பதவியில் அவர் நீடிக்க முடியாது,” பிசிசிஐ குழுவினர் தெரிவித்தார்.
தற்போது வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் இருக்கிறது. கடைசி போட்டியில் இந்திய அணி தோல்வி பெற்று தொடரை இழந்தால், கண்டிப்பாக கோலியின் கேப்டன் பதவி பற்றி கேள்விகள் எழும். அப்படி, விராட் கோலியிடம் இருந்து கேப்டன் பொறுப்பு பறிக்க பட்டால், இந்த இரண்டு வீரர்களில் யாராவது ஒருவர் இந்திய அணியின் கேப்டன் பதவியில் உட்காருவார்கள்.
2. அஜிங்க்யா ரஹானே
டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் மும்பை வீரர் அஜிங்க்யா ரஹானே, ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறார். சாம்பியன்ஸ் டிராபியின் போது வாய்ப்பில்லாமல் தவித்த ரஹானே, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக விளையாடி, இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் 50க்கு மேல் அடித்திருக்கிறார்.
இந்த வருட தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரஹானே தலைமையில் இந்திய அணி வெற்றி பெற்று அசத்தியது. இதனால், அவருடைய கேப்டன்சி திறமையை வெளி படுத்தினார். இதனால், இவர் இந்திய கேப்டனாக வர வாய்ப்பு இருக்கிறது.
1. ரோஹித் சர்மா
இந்திய கிரிக்கெட் வாரியம் தேடி கொண்டிருக்கும் கேப்டனுக்கு பொருத்தமானவர் ரோகித் சர்மா. இந்திய அணியின் நட்சத்திர வீரராய் ரோகித் சர்மா இருக்கிறார். சாம்பியன்ஸ் டிராபியில் அவருடைய சிறப்பான ஆட்டங்களே அதை நிரூபித்தது. 6 மாதங்கள் கழித்து, இந்திய அணியில் விளையாடி அந்த தொடரில் சிறப்பாக விளையாடினர் ரோஹித் சர்மா.
இவர் கேப்டன்சியிலும் சும்மா இல்லை. இந்தியன் பிரீமியர் லீக்கில் 3 முறை கோப்பை வென்ற ஒரே கேப்டன் இவர்தான். இதனால், கேப்டனாக வருவதற்கு இவருக்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது.