இந்தியாவின் அடுத்த இலக்கு

இந்தியா கிரிக்கெட் அணி தற்போது மொத்தமாக 23 போட்டிகள் கொண்ட கட்டத்திற்க்கு தயாறாகி வருகிறது. 2017 ன் இரண்டாம் ஆறு மாதத்தில் இந்த 23 போட்டிகள் இந்திய மண்ணில் நடைபெற உள்ளது.

 

இந்த 23 போட்டிகளுக்காக  முதலாவதாக ஆஸ்திரேலியா இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்ள போகிறது. 5 ஒரு நாள் போட்டியிலும் 3 டி20 போட்டியிலும் விளையாடவுள்ளது. சென்னை, பெங்களூர், கொல்கத்தா, இந்தூர் மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில் முறையே ஒரு நாள் போட்டிகளும், ஹைதராபாத், ராஞ்சி, கவுகாத்தி ஆகிய நகரங்களில் முறையே டி20 போட்டிகளும் நடைபெறும்.

அதனை தொடர்ந்து நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளது. அந்த அணி 3 ஒரு நாள் போட்டியிலும் 3 டி20 போட்டியிலும் விளையாடவுள்ளது. ஒரு நாள் போட்டிகள்  முறையே மும்பை, புனே மற்றும் கான்பூர் ஆகிய இடங்களில் நடைபெறும். டி20 போட்டிகள் டெல்லி, கட்டக் மற்றும் ராஜ்கோட் ஆகிய நகரங்களில் நடக்கிறது.

அதனை தொடர்ந்து இலங்கை அணி இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்ள போகிறது. அந்த அணி 3 டெஸ்ட் போட்டியிலும் 3 ஒரு நாள் போட்டியிலும் 3 டி20 போட்டியிலும் விளையாடவுள்ளது. ஆனால் முன்னதாக அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் இலங்கையின் சுற்று பயணம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இந்தியா தற்போது அதை முன்னரே முடித்துக் கொள்ள இலங்கையை பணித்ததன் பேரில் சற்று முன்னதாக நடைபெறும்.

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகள் கொல்கத்தா, டெல்லி மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில் முறையே நடைபெறும்.

ஒரு நாள் போட்டிகள் தர்மசாலா, மொகாலி மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களிலும் டி20 போட்டிகள் கொச்சி/திருவனந்தபுரம், இந்தூர் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் நடக்கிறது.

 தற்போது இலங்கையில் சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இலங்கைக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டியிலும் அடுத்து ஒரு நாள் மற்றும் டி20 போட்டியிலும் விளையாடவுள்ளது.

பின்னர் இந்திய திரும்பும் நம் அணி மேற்கூறிய அனைத்து அணிக்கு எதிராகவும் இந்தியாவில் விளையாடவுள்ளது. அதன் பின்னர் அடுத்த ஆண்டு தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்தில் சென்று விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த 23 போட்டிகளுக்காக இன்னமும் தேதிகள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதனை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவிக்கும் வரை காத்திருப்போம்.

Editor:

This website uses cookies.