கடவுளை மிஞ்சிய சிஷ்யன்... ஆஸ்திரேலியா மண்ணில் சச்சின் படைத்த பல சாதனைகளை முறையடித்த விராட் கோலி! 1

உலக கோப்பை டி20 தொடரில் அசத்தி வரும் விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளை ஆஸ்திரேலியா மண்ணில் முறியடித்து வருகிறார்.

டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ஒற்றை நம்பிக்கையாக இருந்து வருவது விராட் கோலியின் பேட்டிங். ஆசிய கோப்பை தொடருக்கு முன்பு படுமோசமான பார்மில் இருந்த விராட் கோலி மனதளவிலும் தனது பேட்டிங்கில் மீண்டும் வேற லெவலாக மாறியுள்ளார்.

குறிப்பாக உலகக்கோப்பை தொடரில் இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று அரைசதங்கள் அடித்திருக்கிறார். இந்த மூன்றிலும் விராட் கோலி ஆட்டம் இழக்காமல் இருந்தது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

சச்சின் மற்றும் விராட் கோலி

பாகிஸ்தானுக்கு எதிராக 53 பந்துகளில் 82 ரன்கள் அடித்தது, இதுவரை விராட் கோலி விளையாடியதில் மிகச் சிறப்பான இன்னிங்ஸ் என்று சச்சின் டெண்டுல்கர் உட்பட பலரும் பாராட்டினர். அடுத்ததாக நெதர்லாந்து அணிக்கு எதிராக 62 ரன்கள், கடைசியாக நடந்து முடிந்த வங்கதேசம் அணிக்கு எதிராக 64 ரன்கள் என டாப் ஃபார்மில் இருக்கிறார்.

விராட் கோலி, அசத்தலான பேட்டிங் மூலம் பல்வேறு சாதனைகளையும் படைத்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கரின் பல வருட சாதனையை முறியடித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி

ஆஸ்திரேலிய மண்ணில் சச்சின் டெண்டுல்கர், விளையாடிய 84 இன்னிங்சில் 3300 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 17 அரைசதம், 7 சதங்கள் அடங்கும் இவரது சராசரி 42.85 ஆகும். சச்சின் டெண்டுல்கரின் இந்த சாதனையை தற்போது முறியடித்து இருக்கிறார் விராட் கோலி. இவர் 68 இன்னிங்சில் 3350 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 11 சதங்கள் மற்றும் 18 அரைசதங்கள் அடங்கும்.

விராட் கோலி, ஆஸ்திரலிய மண்ணில் டி20 போட்டிகளிலும் பேய் ஃபார்மில் இருக்கிறார். 15 போட்டிகளில் 14 இன்னிங்ஸ்கள் விளையாடியுள்ள விராட் கோலி, 671 ரன்கள் அடித்து, 84 ரன்கள் சராசரியாக வைத்திருக்கிறார். இதில் எட்டு அரைசதங்கள் அடங்கும் அதிகபட்சமாக 90 ரன்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலி

ஆஸ்திரேலிய மண்ணில் டி20 போட்டிகளில் 500 ரன்களுக்கும் அதிகமாக அடித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகிறார்.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *